கோலா கெடா (மக்களவை தொகுதி)
From Wikipedia, the free encyclopedia
கோலா கெடா மக்களவை தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kuala Kedah; ஆங்கிலம்: Kuala Kedah Federal Constituency; சீனம்: 瓜拉吉打联邦选区) என்பது மலேசியா, கெடா மாநிலத்தில், கோத்தா ஸ்டார் மாவட்டம் (Kota Setar District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவை தொகுதி (P010) ஆகும்.[4]
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
கோலா கெடா (P010) மலேசிய மக்களவை தொகுதி கெடா | |
---|---|
Kuala Kedah (P010) Federal Constituency in Kedah | |
கெடா மாநிலத்தில் கோலா கெடா மக்களவை தொகுதி | |
மாவட்டம் | கோத்தா ஸ்டார் மாவட்டம் கெடா |
வாக்காளர் தொகுதி | கோலா கெடா தொகுதி |
முக்கிய நகரங்கள் | அலோர் ஸ்டார் |
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1958 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமத் பக்ருதீன் பக்ருராசி (Ahmad Fakhruddin Fakhrurazi) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 132,500[1][2] |
தொகுதி பரப்பளவு | 233 ச.கி.மீ[3] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022 |
மூடு
கோலா கெடா மக்களவை தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. 1959-ஆம் ஆண்டில் இருந்து மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. 31 அக்டோபர் 2022-இல் வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), கோலா கெடா தொகுதி 52 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது.[5]