மக்களவை (மலேசியா)
மலேசிய பாராளுமன்றத்தின் கீழவை / From Wikipedia, the free encyclopedia
டேவான் ராக்யாட் (மலாய்: Dewan Rakyat, House of Representatives) என்பது மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையைக் (கீழவை) குறிக்கும் மலாய்ச் சொல் ஆகும். டேவான் என்றால் அவை. ராக்யாட் என்றால் மக்கள். மலேசியாவின் அனைத்துச் சட்ட மசோதக்களும் இங்குதான் விவாதிக்கப்பட்டு, இயற்றப்படுகின்றன.
விரைவான உண்மைகள் மக்களவைடேவான் ராக்யாட் Dewan RakyatHouse of Representatives, தலைமை ...
மக்களவை டேவான் ராக்யாட் Dewan Rakyat House of Representatives | |
---|---|
13-ஆவது நாடாளுமன்றம் | |
தலைமை | |
நாடாளுமன்ற சபாநாயகர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 222 உறுப்பினர்கள் |
அரசியல் குழுக்கள் | (6 மே 2013)
மலேசிய சோசலிச கட்சி (0)
சுயேட்சைகள் (0) |
தேர்தல்கள் | |
அண்மைய பொதுத் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2018 |
கூடும் இடம் | |
மலேசிய நாடாளுமன்றம், கோலாலம்பூர், மலேசியா | |
வலைத்தளம் | |
www.parlimen.gov.my |
மூடு
அவ்வாறு இயற்றப்படும் சட்ட மசோதாக்கள், மக்களவையில் இருந்து நாடாளுமன்ற மேலவையின் சம்மதத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதன் பின்னர், மலேசிய அரசர் ஒப்புதல் அளித்த பின்னர் அந்த மசோதாக்கள் சட்டங்களாகின்றன. நாடாளுமன்ற மேலவை டேவான் நெகாரா என்று அழைக்கப்படுகிறது.
டேவான் ராக்யாட்டின் உறுப்பினர்களைப் பொதுவாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்றே அழைக்கின்றனர். மலேசியத் தலைநகரமான கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. அங்குதான் நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.