சாகி பாலம்
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
சாகி பாலம் (Shahi Bridge) அல்லது முனிம் கான் பாலம் அல்லது அக்பரி பாலம் அல்லது முகலாய பாலம் அல்லது சான்பூர் பாலம் என்பது இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஜவுன்பூர் மாவட்டத்தின் தலைமையிட நகரமான ஜவுன்பூர் நகரத்தில் பாயும் கோமதி ஆற்றின் மீது 16ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாலமாகும். சாகி பாலம் சான்பூர் தொடருந்து நிலையத்திற்கு வடக்கே, 1.7 கி.மீ. தொலைவிலும் சாபராபாத்தின் வடமேற்கு, 7.3. கி.மீ. தொலைவிலும், மரியாகூவின் வடக்கு-வடகிழக்கே 16 கி.மீ. தொலைவிலும் கிராகட் நகரின் மேற்கு-வடமேற்கு திசையில் 26.6 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.[1]
சாகி பாலம் | |
---|---|
சாகி பாலத்தின் கண்கவர் தோற்றம் | |
ஆள்கூற்று | 25.74870°N 82.68468°E |
கடப்பது | கோமதி ஆறு |
இடம் | ஜவுன்பூர், உத்தரப் பிரதேசம் |
அதிகாரபூர்வ பெயர் | அக்பரி பாலம் |
பராமரிப்பு | உ.பி. தொல்லியல் துறை, பொதுப்பணித் துறை |
Heritage status | 1978 |
Preceded by | சார்கி படகுப் பாலம் |
Followed by | சத்பவன பாலம் |
Characteristics | |
வடிவமைப்பு | வளைவுப் பாலம் |
History | |
வடிவமைத்தவர் | அப்சல் அலி |
கட்டத் தொடங்கிய நாள் | 1564 |
கட்டி முடித்த நாள் | 1567 |
திறக்கப்பட்ட நாள் | 1567 |
Collapsed | 1934 (பகுதி உ.ம். ⅓) |
Statistics | |
சுங்கம் | இல்லை |
முகலாய பேரரசர் அக்பர் சாகி பாலத்தைக் கட்ட உத்தரவிட்டார். இது 1568-69 ஆம் ஆண்டில் முனிம் கானால் முடிக்கப்பட்டது. இந்தப் பாலம் கட்டி முடிக்க நான்கு ஆண்டுகள் ஆனது.[2] இது ஆப்கானித்தான் கட்டிடக் கலைஞர் அப்சல் அலி என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
1934 நேபாளம்-பீகார் நிலநடுக்கத்தில் பாலம் கடுமையாகச் சேதமடைந்தது. இதன் ஏழு வளைவுகள் மீண்டும் கட்டப்பட்டது. இதன் வரலாற்று முக்கியத்துவத்துடன், பாலம் இன்னும் பயன்பாட்டில் உள்ளது.[3]
இந்த பாலம் 1978 முதல் தொல்லியல் இயக்குநரகத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு பட்டியலில் உள்ளது.[4]
இந்த பாலம் பொதுவாக சான்பூரின் மிக முக்கியமான முகலாய அமைப்பாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சாகி பாலத்திற்கு இணையான புதிய பாலம் 2006ஆம் ஆண்டு நவம்பர் 28ஆம் தேதி அப்போதைய உத்தரப்பிரதேச முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.[5][6]
வில்லியம் கோட்சசு தனது 'செலக்ட் வியூஸ் இன் இந்தியா' என்ற புத்தகத்தில் பாலம் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:[7]
வெள்ளப்பெருக்கு அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் 1774ஆம் ஆண்டில் பிரித்தானியப் படைகளின் முழுப் படையணியும் படகுகளில் பாலத்தின் மேல் சென்றது”
உருட்யார்ட் கிப்லிங்கின் அக்பரின் பாலம் என்ற கவிதை இந்தப் பாலத்தைக் குறிப்பிடுகிறது [8]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.