நேபாள-பிகார் நிலநடுக்கம், 1934

From Wikipedia, the free encyclopedia

Remove ads

1934 ஆம் ஆண்டின் நேபாள-பிகார் நிலநடுக்கம் (1934 Nepal–Bihar earthquake or 1934 Bihar–Nepal earthquake) என்பது, 15 சனவரி 1934 அன்று மதியம் 2.28 மணி அளவில், எட்டு ரிக்டர் அளவில் ஏற்பட்ட வலுவான நிலநடுக்கமாகும். இந்நிலநடுக்கத்தால் நேபாளம் மற்றும் இந்தியாவின் வடக்கு பிகார் பகுதிகள் பலத்த சேதமடைந்தன.[3]

விரைவான உண்மைகள் நாள், தொடக்க நேரம் ...
Remove ads

நிலநடுக்கம்

Thumb
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பிகார் பகுதிகளை மகாத்மா காந்தி பார்வையிடல்

நேபாளத்தின் கி்ழக்கில், பிகார்-நேபாள எல்லைப்பகுதியில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.[4] இந்நிலநடுக்கத்தால் நேபாளத்தின் தலைநகரம் காட்மாண்டு நகரம் மற்றும் இந்தியாவின் வடக்கில் பிகார் மாநிலத்தின் பூர்ணியா மாவட்டம் மற்றும் முசாபர்பூர் மாவட்டம் முதல் தெற்கு பிகார் மாவட்டத்தின் முங்கேர் மாவட்டங்கள் வரை பலத்த உயிர்ச் சேதமும், பொருட்தேசமும் ஏற்பட்டது.

லாசா முதல் மும்பாய் வரையும், மற்றும் அசாம் முதல் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளிலும் இந்நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டது. நிலநடுக்க மையத்திலிருந்து 650 கி.மீ. தொலைவில் உள்ள கொல்கத்தாவிலும் பல கட்டிடங்கள் இடிந்தது.[5]

சேத விவரங்கள்

இந்நில நடுக்கத்தால் காத்மாண்டு சமவெளியின் மூன்று முக்கிய நகரங்களான காட்மாண்டு, பக்தபூர் மற்றும் லலித்பூர் நகரங்களின் பல கட்டிடங்கள் பலத்த சேதமடைந்து இடிந்து வீழ்ந்தது.

பிகார் மாநிலத்தின் வடக்கில், நேபாள எல்லையை ஒட்டி அமைந்த சீதாமரி நகரத்தின் அனைத்து கட்டிடங்கள் தரைமட்டமாயின.

பிகார் - நேபாள எல்லையில், நேபாள நகரமான வீரகஞ்ச்சின் தொலைபேசி இணைப்பகம் முற்றிலும் சேதமடைந்தது.[6]

இந்நிலநடுக்கத்தால் 10,700 முதல் 12,000 வரை உயிர் பலி ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.[4][7] இதில் 7,253 உயிர்பலிகள் பிகாரில் மட்டும் பதிவாகியுள்ளது.[8]

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads