செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி
மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி / From Wikipedia, the free encyclopedia
செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Setiawangsa; ஆங்கிலம்: Setiawangsa Federal Constituency; சீனம்: 斯迪亚旺沙国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P118) ஆகும்.
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர்களின் எண்ணிக்கை ...
செத்தியா வங்சா (P118) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Setiawangsa (P118) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 95,753 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | செத்தியா வங்சா தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; செத்தியா வங்சா, தாமான் செத்தியா வங்சா, தியாரா செத்தியா வங்சா, புக்கிட் செத்தியா வங்சா, புஞ்சாக் செத்தியா வங்சா |
பரப்பளவு | 16 ச.கி.மீ[2] |
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 2003 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | நிக் நசுமி நிக் அகமது (Nik Nazmi Nik Ahmad) |
மக்கள் தொகை | 147,095 [3] |
முதல் தேர்தல் | 2004 |
இறுதித் தேர்தல் | 2022[4] |
மூடு
செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 2004-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
2004-ஆம் ஆண்டில் இருந்து செத்தியா வங்சா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.