ஜாக் கலிஸ்
From Wikipedia, the free encyclopedia
ஜாக் ஹென்றி கலிஸ் (Jacques Henry Kallis, பிறப்பு: அக்டோபர் 16, 1975),தென்னாபிரிக்கா துடுப்பாட்ட அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர்களில் ஒருவர். இவர் அணியின் வலதுகை துடுப்பாளரும், வலதுகை மித விரைவு பந்துவீச்சாளரும் ஆவார். மேலும் இவர் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 10,000 ஒட்டங்கள் மற்றும் 250 இலக்குகள் வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்துள்ள ஒரே வீரர் இவர் ஆவார். அனைத்துக் காலத்திற்குமான சிறந்த சகலத் துறையர்களுள் ஒருவராகக் கருதப்படுகிறார்.[1] மேலும் ஒருநாள் போட்டிகளில் 131 கேட்சுகளைப் பிடித்துள்ளார். மேலும் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ள இவர் மொத்தம் 13,289 ஓட்டங்களையும் 290 இலக்குகளையும் எடுத்துள்ளார். மேலும் 200 கேட்சுகளைப் பிடித்துள்ளார்.[2][3]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | ஜாக் ஹென்றி கலிஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை விரைவு மிதம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | சகலதுறை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 262) | திசம்பர் 14 1995 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | திசம்பர் 18 2013 எ. இந்தியத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 38) | சனவரி 9 1996 எ. இங்கிலாந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | திசம்பர் 11 2013 எ. இந்தியத் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 3 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்இன்ஃபோ, திசம்பர் 22 2013 |
இவர் மொத்தம் 166 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடினார். இவரின் மட்டையாளர் சராசரி 55 க்கும் அதிகமாக உள்ளது.[4][5] 2007 அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்கள் வரையிலான நான்கு போட்டிகளில் ஐந்து நூறு ஓட்டங்கள் எடுத்துள்ளார். சனவரி 2011 இல் இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேருத் துடுப்பாட்டத்தின் இரண்டாவது ஆட்டப் பகுதியில் நூறு ஓட்டங்கள் அடித்தார். இது இவரின் 40 ஆவது நூறு ஆகும். இதன்மூலம் அதிக நூறுகள் அடித்த வீரர்களில் ரிக்கி பாண்டிங் சாதனையை தகர்த்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். சச்சின் டெண்டுல்கர் 51 நூறுகள் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
2008 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது. 2005 ஆம் ஆண்டில் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட இவை விருதையும், 2007 ஆம் ஆண்டின் சிறந்த தேர்வுத் துடுப்பாட்ட வீரருக்கான பன்னாட்டுத் துடுப்பாட்ட இவை விருதையும் பெற்றார்.[6] சோபர்ஸ், மற்றும் வால்ரர் ஹமொண்ட், ஜாக் கலிஸ் ஆகியோர் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் மற்றும் சகலத் துறையர்கள் என கெவின் பீட்டர்சன் தெரிவித்தார். இவர்களின் தேர்வுத் துடுப்பாட்ட சராசரி 50 க்கும் அதிகமாகவும், ஒருநாள் போட்டிகளில் 20 க்கு அதிகமாகவும் உள்ளது.[7]
சனவரி 2, 2013 இல் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் 13,000 ஓட்டங்கள் எடுத்தார்[8]. இதன்மூலம் இந்த இலக்கினை எடுத்த முதல் தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணி வீரர் மற்றும் சர்வதேச அளவில் நான்காவது வீரர் எனும் சாதனையைப் படைத்தார். மேலும் 292 இலக்குகளையும் எடுத்துள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் அதிகஓட்டங்கள் எடுத்த மட்டையாளர்களுக்கான தரவரிசையில் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங்கிற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் உள்ளார்.[9][10][11][12][13] 2013 ஆம் ஆண்டின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விசுடன் துடுப்பாட்டாளர்களின் நாட்குறிப்பு அறிவித்தது.[14] டிசம்பர் 2013 இல் டர்பனில் நடந்த இரண்டாவது தேர்வுத் துடுப்பாட்டத்துடன் சர்வதேச துடுப்பாட்டப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.[15][16][17] இவரின் இறுதிப் போட்டியில் நூறு ஓட்டங்கள் அடித்தார் இதன்மூலம் இறுதிப்போட்டியில் நூறு அடித்த சில துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.[18][19] சூலை 30,2014 இல் அனைத்து வடிவ துடுப்பாட்டங்களிலும் இருந்து ஓய்வு பெற்றார்.[20]