தர்மேந்திரா
திரைப்பட நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
தர்மேந்திரா (Dharmendra) என்று அழைக்கபடும் தரம் சிங் தியோல் (பிறப்பு: 8 திசம்பர், 1935) என்பவர் ஒரு இந்திய திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி ஆவார். 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
விரைவான உண்மைகள் தர்மேந்திரா, இந்திய மக்களவை உறுப்பினர் ...
தர்மேந்திரா | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 13 மே 2004 – 16 மே 2009 | |
முன்னையவர் | ராமேஷ்வர் லால் தூடி |
பின்னவர் | அர்ஜுன் ராம் மேக்வா |
தொகுதி | பிகானேர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | தரம் சிங் தியோல் 8 திசம்பர் 1935 (1935-12-08) (அகவை 88) பிரித்தானிய இந்தியா, பஞ்சாப், நஸ்ராலி (தற்கால இந்தியா, பஞ்சாப்) |
குடியுரிமை | பிரித்தானிய இந்தியர் (1935–1947) இந்தியர் (1947 இல் இருந்து) |
தேசியம் | Indian |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர்s |
|
பிள்ளைகள் | சன்னி தியோல், பாபி தியோல்l ஈஷா தியோல் உள்ளிட்ட 6 பேர் |
முன்னாள் கல்லூரி | பக்வாராவின் ராம்கரியா கல்லூரி |
வேலை | நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி |
விருதுகள் | பத்ம பூசண் (2012) |
கையெழுத்து | |
மூடு
இவர் இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று 1975 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படப் பாத்திரமாகும்.[2]
இவர் ராஜஸ்தானில் உள்ள பிகானேர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 14 வது மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது இவருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டது.[3]