From Wikipedia, the free encyclopedia
தானியேல் புயல் (Storm Daniel) அல்லது சூறாவளி தானியேல் (Cyclone Daniel) என்பது இதுவரை பதிவுசெய்யப்பட்ட மிக மோசமானதும், அதிக சேதத்தை உண்டுபண்ணியதுமான ஒரு நடுநிலக் கடல் வெப்பமண்டலச் சூறாவளியும், 2023 இன் இன்றுவரை மிக மோசமான வானிலை நிகழ்வுமாகும்.[4] 2023 செப்டம்பர் 4 இல் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக உருவான இப்புயல், கிரேக்கம், பல்காரியா, துருக்கி ஆகிய நாடுகளை விரிவான வெள்ளத்துடன் பாதித்தது. புயல் பின்னர் ஒரு நடுநிலக் கடல் தாழ்வாக ஒழுங்கமைக்கப்பட்டு தானியேல் புயல் எனப் பெயரிடப்பட்டது. இது விரைவில் அரை வெப்பமண்டலப் பண்புகளைப் பெற்று லிபியாவின் கடற்கரையை நோக்கி நகர்ந்து, அங்கு அது பேரழிவுகரமான வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியது. புயல் ஒரு ஒமேகா தொகுதியின் விளைவாக உயர் அழுத்த மண்டலமாக உருவான இப்புயல், இரண்டு குறைந்த அழுத்த மண்டலங்களுக்கு இடையில் மாறி, கிரேக்க எழுத்தான Ω வடிவமான ஐசோபார்களாயின.[5][6]
2023 செப்டம்பர் 9 இல் நடுநிலக் கடல் பகுதியில் தானியேல் புயல் | |
வானிலை வரலாறு | |
---|---|
தோற்றம் | 4 செப்டம்பர் 2023 |
கலைவு | 12 செப்டம்பர் 2023 |
Subtropical storm | |
10-நிமிடம் நீடித்தது (EUMETSAT) | |
அதிகளவு காற்று | 85 km/h (50 mph) |
ஒட்டுமொத்த விளைவுகள் | |
இறப்புகள் | 11,497+ (உறுதிப்படுத்தப்பட்டது)[1][2] 18,000–20,000 (மதிப்பீடு)[3] |
காயப்பட்டோர் | 7,000+ |
காணாமல்போனோர் | 10,100+ |
சேதம் | >US$2 பில்லியன் (US$2.14 பில்லியன் in 2023) |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | லிபியா, கிரேக்கம், பல்காரியா, துருக்கி,எகிப்து, இஸ்ரேல் |
கிரேக்கத்தில், அதன் பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் மிக மோசமான புயலாகக் கருதப்பட்டது, கடுமையான மழை வெள்ளத்திற்கு இது வழிவகுத்தது, 2 பில்லியன் யூரோக்களுக்கு மேல் சேதத்தை ஏற்படுத்தியது. லிபியா மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது, மழை பெய்வதால் டெர்னா நகருக்கு அருகில் இருந்த இரண்டு அணைகளும் இடிந்து விழுந்தன. இது 10,000 இற்கும் அதிகமானோரின் இறப்புகளுக்கு வழிவகுத்தது, 10,000 முதல் 100,000 பேர் வரை காணாமல் போயினர், இருப்பினும் சரியான புள்ளிவிவரங்கள் ஆதாரத்தின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இத்தகைய பேரழிவுகளுக்கு லிபியாவின் பெரும் பாதிப்பு அதன் 2014-2020 உள்நாட்டுப் போரில் குற்றம் சாட்டப்பட்டது, இப்போரினால் லிபியாவின் முக்கியமான உள்கட்டமைப்பு சேதப்படுத்தப்பட்டு, புயலுக்கு முன் மோசமான நிலையில் இருந்தது. இதைத் தொடர்ந்து, நடுநிலக் கடலில் உள்ள பல நாடுகள் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு உதவி வழங்குவதாக உறுதியளித்தன.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.