![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/7c/Subdistricts_of_Malappuram_%2528August_2020%2529.svg/langta-640px-Subdistricts_of_Malappuram_%2528August_2020%2529.svg.png&w=640&q=50)
திரூர் வட்டம்
கேரளத்தில் உள்ள ஒரு வட்டம் / From Wikipedia, the free encyclopedia
திரூர் வட்டம் (Tirur Taluk) என்பது இந்தியாவின் கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள திரூர் வருவாய் கோட்டத்தின் கீழ் வரும் ஒரு வட்டமாகும்.[1] இதன் தலைமையகம் திரூர் நகரம் ஆகும். [1] திரூர் வட்டத்தில் தானூர், திரூர், கோட்டக்கல், வளஞ்சேரி ஆகிய நான்கு நகராட்சிகள் உள்ளன. [1] பெரும்பாலான நிர்வாக அலுவலகங்கள் திரூர், குட்டிப்புரம், தானூரில் உள்ள குறு-குடிமை நிலையங்களில் அமைந்துள்ளன. இன்றைய திரூர் வட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராமங்கள் இடைக்கால தானுர் இராச்சியத்தின் ( வெட்டத்துநாடு ) பகுதிகளாக இருந்தன. [2] தானூர் துறைமுகம் இடைக்காலத்தில் இந்தியாவின் தென்மேற்கு கடற்கரையில் ஒரு முக்கியமான துறைமுக நகரமாக இருந்தது. [2]
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/64/Tirur_bus_stand.jpg/640px-Tirur_bus_stand.jpg)
விரைவான உண்மைகள் திரூர் வட்டம், நாடு ...
திரூர் வட்டம் | |
---|---|
வட்டம் | |
![]() கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 11.152610°N 75.956678°E / 11.152610; 75.956678 | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
Taluk formation | 1 நவம்பர் 1957; 66 ஆண்டுகள் முன்னர் (1957-11-01) |
தோற்றுவித்தவர் | கேரள அரசு |
தலைமையகம் | திரூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | KL-55 |
மூடு