தூத்துக்குடி
From Wikipedia, the free encyclopedia
தூத்துக்குடி (Thoothukudi அல்லது Tuticorin) தென்னிந்திய மாநிலமான, தமிழ்நாட்டைச் சேர்ந்த மாநகரமும், தூத்துக்குடி மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இது ஒரு துறைமுக நகரமாகும். இது தமிழகத்தின் 10-ஆவது மாநகராட்சியாக (தூத்துக்குடி மாநகராட்சி), ஆகஸ்ட் 5, 2008-இல் அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதியினால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.[3] இதன் மேற்கிலும், தெற்கிலும் ஸ்ரீவைகுண்டம் வட்டமும், வடக்கில் ஒட்டப்பிடாரம் வட்டமும் உள்ளன. கிழக்கில் வங்காள விரிகுடா கடல் அமைந்துள்ளது. தூத்துக்குடி வரலாற்று ரீதியில், பரதவர் இன மக்கள் மீன் பிடித்தும், அதிகளவில் முத்துகுளித்தும் வந்தனர். இன்றளவும் இம்மக்கள், சங்கு குளிக்கும் தொழில் செய்கின்றனர்.இதை நாம், அகநானூறு 350-வது அதிகாரத்தில் காணலாம். இம்மாவட்டத்திற்கு 'முத்து நகர்' என்ற பெயரும் உண்டு. தூத்துக்குடியில், அனல் மின் நிலையமும், ஸ்பிக் உரத்தொழிற்சாலையும் அமைந்துள்ளன.
தூத்துக்குடி | |
---|---|
மேலிருந்து கடிகாரம் சுழலும் திசையில் தூத்துக்குடி அனல்மின் நிலையம், தூத்துக்குடி வானூர்தி நிலையம், முத்து நகரத்தின் முத்து சிப்பி, பனிமய மாதா பேராலயம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில், தூத்துக்குடியில் உப்புத் தொழில் மற்றும் வ. உ. சிதம்பரனார் துறைமுகம் | |
அடைபெயர்(கள்): முத்து நகர், தமிழகத்தின் உப்பு நகரம் | |
தூத்துக்குடி (தமிழ்நாடு) | |
ஆள்கூறுகள்: 8.764200°N 78.134800°E / 8.764200; 78.134800 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
பகுதி | பாண்டிய நாடு |
மாவட்டம் | தூத்துக்குடி |
தோற்றுவித்தவர் | ம. கோ. இராமச்சந்திரன் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | தூத்துக்குடி மாநகராட்சி |
• மக்களவை உறுப்பினர் | கனிமொழி |
• சட்டமன்ற உறுப்பினர் | கீதா ஜீவன் |
• மாநகர முதல்வர் | காலியிடம் |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் கி. செந்தில் ராஜ், இ.ஆ.ப. |
பரப்பளவு | |
• மாநகரம் | 90.663 km2 (35.005 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 10 |
ஏற்றம் | 29 m (95 ft) |
மக்கள்தொகை (2011)[1] | |
• மாநகராட்சி | 2,37,830 |
• தரவரிசை | 10 |
• பெருநகர் | 4,11,628[2] |
இனம் | தூத்துக்குடிகாரன் |
மொழிகள் | |
• அலுவல்மொழி | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் குறியீடு | 628 0xx |
தொலைபேசி குறியீடு | +91-461 |
வாகனப் பதிவு | TN-69,TN-96 |
சென்னையிலிருந்து தொலைவு | 607 கி.மீ (377 மைல்) |
திருச்சியிலிருந்து தொலைவு | 282 கி.மீ (175 மைல்) |
மதுரையிலிருந்து தொலைவு | 150 கி.மீ (93 மைல்) |
விருதுநகரிலிருந்து தொலைவு | 116 கி.மீ (72 மைல்) |
தட்பவெப்ப நிலை | கோப்பென் |
இணையதளம் | thoothukudi |