நொய்யல் ஆறு
காவிரியின் துணையாறு / From Wikipedia, the free encyclopedia
நொய்யல் ஆறு (Noyyal River) தமிழ்நாட்டின், கோவை மாவட்டத்தின், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்த, சிறுவாணி மலையின் கிழக்குச் சரிவு, வெள்ளியங்கிரி மலையிலிருந்து உருவாகும் ஓடைகள் இணைந்து உருவெடுக்கிறது. நொய்யல் ஆறு, கிழக்கு நோக்கி பேரூர், குனியமுத்தூர், வெள்ளலூர், இருகூர்,சூலூர், மங்கலம், திருப்பூர், ஒரத்துப்பாளையம் என 180 கிலோ மீட்டர் பயணித்து, கரூர் அருகே நொய்யல் கிராமத்தில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் சங்ககாலப் பெயர் காஞ்சியாறு என்பதாகும்.[1]
விரைவான உண்மைகள் நொய்யல் ஆறு, அமைவு ...
நொய்யல் ஆறு | |
---|---|
நொய்யல் ஆறு | |
அமைவு | |
நாடு | இந்தியா |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர், தமிழ்நாடு |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | காவிரி ஆறு |
நீளம் | 180 km (110 mi) |
வடிநில அளவு | 3,500 km2 (1,400 sq mi) |
மூடு