பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
பாகான் டாலாம் (ஆங்கிலம்: Bagan Dalam; (மலாய் Bagan Dalam; சீனம்: 峇眼达南; ஜாவி: باڬن دالم) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள நகரம்.
பாகான் டாலாம் | |
---|---|
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°23′0″N 100°22′0″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட செபராங் பிறை மாவட்டம் |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• பாகான் நாடாளுமன்றத் தொகுதி | லிம் குவான் எங் (பாக்காத்தான் ஹரப்பான்-ஜனநாயக செயல் கட்சி) |
• சட்டமன்ற உறுப்பினர் | சதீஸ் முனியாண்டி (பாக்காத்தான் ஹரப்பான்-ஜனநாயக செயல் கட்சி) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 12100 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +604 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | http://www.mbsp.gov.my |
நகரப் பகுதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமமான கம்போங் பாகான் டாலாம் எனும் கிராமத்தின் நினைவாக இந்த இடத்திற்குப் பெயரிடப்பட்டது. பாகான் டாலாம் என்றால் உள் படகுத் துறை (மலாய்: Dermaga Dalam) என்று பொருள். பட்டர்வொர்த் துறைமுகத்திற்கு (Butterworth Wharves) அருகில் அமைந்துள்ளது.[1]
செபராங் பிறை மாநிலப் பகுதியில் உள்ள பிறை (பினாங்கு) எனும் பெரிய தொழில்துறை பகுதியுடன் பாகான் டாலாம் நகரம் இணைக்கப்பட்டுள்ளது. இந்த நகரை பிறை ஆறு கடந்து செல்கிறது.
இந்த ஆற்றின் மீது, பிறை ஆற்றுப் பாலம் (Prai River Bridge); மற்றும் பழைய துங்கு அப்துல் ரகுமான் பாலம் (Tunku Abdul Rahman Bridge); ஆகிய இரு பாலங்கள் அமைந்துள்ளன.
பாகான் டாலாம் நகரம் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. பட்டர்வொர்த் துறைமுகத்துடன் இணைக்கும் சாலைகளும் உள்ளன
பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 25 கி.மீ.; பட்டர்வொர்த் நகரில் இருந்து 11 கி.மீ. தொலைவில்உள்ளது.
கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[2]
இனக்குழுக்கள் | |
---|---|
இனம் | விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 25% |
சீனர்கள் | 51% |
இந்தியர்கள் | 24% |
மொத்தம் | 100% |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.