பிளாட்டினம் எக்சாபுளோரைடு
From Wikipedia, the free encyclopedia
பிளாட்டினம் எக்சாபுளோரைடு (Platinum hexafluoride) PtF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது அடர்-சிவப்பு நிறமுடைய, எளிதில் ஆவியாகக்கூடிய திண்மமாகும். இது சிவப்பு நிற வாயுவை உருவாக்குகிறது. இந்த சேர்மம், பிளாட்டினத்தின் +6 ஆக்சிசனேற்ற நிலையை விளக்கும் ஒரு தனித்தன்மையுள்ள அணைவுச் சேர்மம் ஆகும். நான்கு d-எதிர்மின்னிகளை மட்டுமே கொண்டிருந்தும், ஒரு மும்மை ஆற்றல் நிலையுடன் (Triplet state) இது இணைகாந்தப் பண்பினைக் (Paramagnetic) கொண்டுள்ளது. PtF6 ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியும் மற்றும் வலிமையான புளோரினேற்றியும் ஆகும். PtF6 திண்ம நிலையிலும், வாயு நிலையிலும், எண்முகி வடிவ அமைப்பைக் கொண்டிருக்கிறது. Pt-F பிணைப்பு நீளங்கள் 185 பிக்கோமீட்டர்களாக உள்ளன.[1]
விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
பிளாட்டினம் எக்சாபுளோரைடு | |
வேறு பெயர்கள்
பிளாட்டினம்(VI) புளோரைடு | |
இனங்காட்டிகள் | |
13693-05-5 N | |
ChemSpider | 21106464 Y |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
PtF6 | |
வாய்ப்பாட்டு எடை | 309.07 கி/மோல் |
தோற்றம் | அடர் சிவப்பு படிகங்கள் |
அடர்த்தி | 3.83 கி/செமீீ3 |
உருகுநிலை | 61.3 °C (142.3 °F; 334.4 K) |
கொதிநிலை | 69.14 °C (156.45 °F; 342.29 K) |
தீவிரமாக வினைபுரிகிறது | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம், oP28 |
புறவெளித் தொகுதி | Pnma, No. 62 |
ஒருங்கிணைவு வடிவியல் |
எண்முகி (Oh) |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 0 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | oxidizer |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மூடு