போயிங் 787 ட்ரீம்லைனர்
From Wikipedia, the free encyclopedia
போயிங் 787 ட்ரீம்லைனர் (Boeing 787 Dreamliner) என்பது நீண்ட-தூர, நடுத்தர அளவுள்ள இரட்டை இயந்திரங்கள் பொருத்தப்பட்ட ஜெட் வானூர்தி ஆகும், இது ஐக்கிய அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்டது. இவ்வானூர்தி 210 முதல் 290 இருக்கைகளைக் கொண்டது. போயிங் நிறுவனத்தின் வானூர்திகளில் இதுவே எரிபொருளை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்தக்கூடியது என போயிங் நிறுவனம் கூறியுள்ளது. அத்துடன் பெரும்பாலும் கலப்புருப் பொருட்களை அதிகமாகப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட முதலாவது வானூர்தியும் இதுவாகும்[4]. இதேயளவான போயிங் 767 வானூர்தியை விட 20% குறைவாக எரிபொருளைப் பயன்படுத்துகிறது[5].
விரைவான உண்மைகள் வகை, உருவாக்கிய நாடு ...
போயிங் 787 ட்ரீம்லைனர் | |
---|---|
போயிங் 787 ட்ரீம்லைனர் | |
வகை | அகல உடல் வானூர்தி, சுழல் தாரை வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | போயிங் |
முதல் பயணம் | திசம்பர் 15 2009 |
அறிமுகம் | அக்டோபர் 26 2011 - ஆல் நிப்போன் ஏர்வேசு (ஏ.என்.ஏ) |
தற்போதைய நிலை | தயாரிப்பிலும், சேவையிலும் |
முக்கிய பயன்பாட்டாளர் | ஆல் நிப்போன் ஏர்வேசு (ஏ.என்.ஏ) |
தயாரிப்பு எண்ணிக்கை | 11[1] |
திட்டச் செலவு | US$32 பில்லியன் (போயிங்கின் செலவு)[2] |
அலகு செலவு | 787-8: US$193.5 மில்லியன் (2011)[3] 787-9: US$227.8 மில்லியன் (2011)[3] |
மூடு
இவ்வானூர்தி 2011, அக்டோபர் 26 இல் முதன் முறையாக பயணிகளுடன் வானில் பறந்தது. ஜப்பான் வானூர்தி நிறுவனமான, ஆல் நிப்போன் ஏர்வேசு டோக்கியோவிலிருந்து ஹாங்காங்கிற்கு இயக்க்கியது.