மு. க. ஸ்டாலின்
தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் / From Wikipedia, the free encyclopedia
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் (பிறப்பு: 1 மார்ச்சு 1953), என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார். இவர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு. கருணாநிதியின் மகன் ஆவார்.
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
விரைவான உண்மைகள் மு.க.ஸ்டாலின், 8-ஆவது தமிழக முதலமைச்சர் ...
மு.க.ஸ்டாலின் | |
---|---|
8-ஆவது தமிழக முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 7 மே 2021 | |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித் ஆர். என். ரவி |
முன்னையவர் | எடப்பாடி க. பழனிசாமி |
தலைவர் திராவிட முன்னேற்றக் கழகம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 ஆகத்து 2018 | |
முன்னையவர் | மு.கருணாநிதி |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் 25 மே 2016 – 3 மே 2021 | |
Deputy | துரைமுருகன் |
முதல்வர் | ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி க. பழனிசாமி |
முன்னையவர் | விஜயகாந்த் |
1-ஆவது தமிழ்நாடு துணை முதலமைச்சர் | |
பதவியில் 29 மே 2009 – 15 மே 2011 | |
ஆளுநர் | சுர்சித் சிங் பர்னாலா |
முதல்வர் | மு. கருணாநிதி |
முன்னையவர் | பதவி உருவாக்கப்பட்டது |
பின்னவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தொகுதி | ஆயிரம் விளக்கு |
உள்ளாட்சித் துறை அமைச்சர், தமிழ்நாடு | |
பதவியில் 13 மே 2006 – 15 மே 2011 | |
முதல்வர் | மு. கருணாநிதி |
முன்னையவர் | வீரபாண்டி எஸ். ஆறுமுகம் |
பின்னவர் | மோகன் |
தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 23 மே 2011 | |
முதல்வர் | ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி க. பழனிசாமி |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
தொகுதி | கொளத்தூர் |
பதவியில் 13 மே 1996 – 15 மே 2011 | |
முதல்வர் | மு. கருணாநிதி, ஜெ. ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் |
முன்னையவர் | கே. ஏ. கிருஷ்ணசாமி |
பின்னவர் | பா. வளர்மதி |
தொகுதி | ஆயிரம் விளக்கு |
37-ஆவது சென்னை மாநகராட்சி மன்றத்தலைவர் | |
பதவியில் 25 அக்டோபர் 1996 – 6 செப்டம்பர் 2002 | |
முன்னையவர் | ஆறுமுகம் |
பின்னவர் | மா. சுப்பிரமணியம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 1 மார்ச்சு 1953 (1953-03-01) (அகவை 71) மதராசு, மதராசு மாநிலம் (தற்போது சென்னை, தமிழ்நாடு), இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | துர்கா ஸ்டாலின் (தி. 1975) |
உறவுகள் | மு.க. முத்து (சகோதரர்) மு.க. அழகிரி (மூத்த சகோதரர்) மு.க. செல்வி (மூத்த சகோதரி) மு.க. தமிழரசு (இளைய சகோதரர்) கனிமொழி (சகோதரி) |
பிள்ளைகள் | உதயநிதி ஸ்டாலின் செந்தாமரை |
பெற்றோர் | தந்தை: மு. கருணாநிதி தாய்: தயாளு அம்மாள் |
உறவினர்கள் | கருணாநிதி குடும்பம் |
வாழிடம்(s) | 25/9, சித்தரஞ்சன் சாலை, ஆழ்வார் பேட்டை, சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
கல்வி | இளங்கலை |
முன்னாள் கல்லூரி | மாநிலக் கல்லூரி, சென்னை |
வேலை |
|
கையெழுத்து | |
இணையத்தளம் | mkstalin |
புனைப்பெயர் | தளபதி |
மூடு
இவர் 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும், 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.[1] 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் 37-ஆவது மேயராக பொறுப்பில் இருந்தார். தனது தந்தையின் மரணத்துக்குப் பிறகு, 28-ஆகத்து-2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார்.[2][3]
இந்தியன் எக்சுபிரசு நிறுவனம் 2019-ஆம் ஆண்டில் வெளியிட்ட இந்தியாவின் மிக சக்திவாய்ந்த நபர்கள் பட்டியலில் மு. க. ஸ்டாலின் 30-ஆவதாக இடம் பெற்றார்.[4]