From Wikipedia, the free encyclopedia
மைக்கேல் டெல் (Michael Saul Dell, பி. பெப்ரவரி 23, 1965) டெல் நிறுவனத்தின் (Dell, Inc.) நிறுவனர்.போர்ஃவ்ஸ் இதழின் கணிப்பின்படி 2006 இன் உலக பணக்காரர்கள் வரிசையில் 41வது இடத்தில் உள்ளார்[1].
மைக்கேல் டெல் | |
---|---|
மைக்கேல் டெல், நிறுவனர், chairman and CEO of Dell | |
பிறப்பு | Michael Saul Dell பெப்ரவரி 23, 1965 Houston, Texas, U.S. |
இருப்பிடம் | Texas, U.S. |
தேசியம் | American |
படித்த கல்வி நிறுவனங்கள் | University of Texas at Austin (dropped out) |
பணி | நிறுவனர், டெல்l |
சொத்து மதிப்பு | US$ 15.3 billion (2013).[1] |
வாழ்க்கைத் துணை | Susan Lynn Lieberman (October 28, 1989–present; 4 children) |
டெக்சாசில் பிறந்தவரான டெல் ஒரு செல்வந்த யூத குடும்பத்தவர். அவர் தனது 7 வயதில் கால்குலேட்டர் வாங்கினார். தனது பதினைந்தாவது வயதில் தன்னால் முடியுமா என்பதைப் பார்ப்பதற்காகவே ஒரு புதிய அப்பிள் II கணினியை முழுவதுமாகக் கழற்றிப் பூட்டினார்.[2] இப்பொழுது தனது மனைவி சூசன் மற்றும் நான்கு பிள்ளைகளுடன் ஒஸ்ற்றினில் வசித்து வருகிறார்.
பல்கலைக் கழகத்தில் கற்றுக் கொண்டிருந்த காலத்தில் பி.சி'ஸ் லிமிட்டெட் (PC's Limited) என்ற நிறுவனத்தைத் தனது அறையில் ஆரம்பித்தார். தனது பத்தொன்பதாவது வயதில் கல்வியை நிறுத்தி முழு நேரமாக நிறுவனத்தில் உழைக்கத் தொடங்கினார். 1987 இல் நிறுவனத்தின் பெயரை டெல் கம்ப்யூட்டர் கார்ப்பொரேசன் (Dell Computer Corporation) என மாற்றினார். 2003 இல் பங்குதாரர்கள் டெல் (Dell, Inc) எனப் பெயரை மாற்ற வாக்களித்தனர். 2004 இல் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவியிலிருந்து விலகினார். ஆயினும் நிறுவனத் தலைவராகத் தொடர்கிறார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.