இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
ராவ் இந்தர்ஜித் சிங் (Rao Inderjit Singh, பிறப்பு: 11 பிப்ரவரி 1950) ஓர் இந்திய அரசியல்வாதியும், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சராகவும், பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். 2009 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தகவல் தொழில்நுட்பக் குழுவின் தலைவராக இருந்து வருகிறார்.[1][2] இவர் 30 மே 2019 முதல் திட்டமிடுதல் மற்றும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் தனி பொறுப்புடன் கூடிய இணை அமைச்சராக உள்ளார்.
ராவ் இந்தர்ஜித் சிங் | |
---|---|
இணை அமைச்சர் (தனி பொறுப்பு) புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 30 மே 2019 | |
முன்னையவர் | டி. வி. சதானந்த கௌடா |
பதவியில் 26 மே 2014 – 9 நவம்பர் 2014 | |
முன்னையவர் | சிறீகாந்த் குமார் ஜெனா |
பின்னவர் | விஜய் குமார் சிங் |
வேதியியல் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் | |
பதவியில் 3 செப்டம்பர் 2017 – 30 மே 2019 | |
பின்னவர் | மன்சுக் எல். மந்தவியா |
நாடாளுமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2009 | |
முன்னையவர் | தொகுதி உருவாக்கப்பட்டது |
தொகுதி | குருகிராம் |
பதவியில் 2004–2009 | |
முன்னையவர் | சுதா யாதவ் |
பின்னவர் | தொகுதி நீக்கப்பட்டது |
தொகுதி | மகேந்திரகிராம் |
பதவியில் 1998–1999 | |
முன்னையவர் | ராவ் ராம் |
பின்னவர் | சுதா யாதவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 11 பெப்ரவரி 1950 ரேவாரி, பஞ்சாப், இந்தியா (தற்போது அரியானா, இந்தியா) |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | மனிதா சிங் |
பிள்ளைகள் | பாரதி ராவ் ஆர்த்தி ராவ் |
வாழிடம்(s) | ரேவாரி, அரியானா, இந்தியா |
கல்வி | இந்து கல்லூரி, தில்லி பல்கலைக்கழகம் |
முன்னாள் கல்லூரி | சட்டம் |
வேலை | அரசியல்வாதி & சமூக சேவகர், விவசாயம், வழக்கறிஞர் |
இணையத்தளம் | http://www.raoinderjitsingh.in/ |
As of 28 மார்ச், 2009 மூலம்: [Biodata] |
இவர் அரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான ராவ் பைரேந்திர சிங்கின் மகனாவார். இவர் தில்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பில் பட்டம் பெற்றார். இவர் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்ட வீரரான ராஜா ராவ் துலா ராம் என்பவரின் சந்ததியினர் ஆவார்.[3]
இவர் 1977 ஆம் ஆண்டு முதல் நான்குமுறை அரியானா சட்டமன்றத்திலிருந்து, சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1982 முதல் 1987 வரை அவர் உணவு மற்றும் நுகர்பொருள் விநியோகத்திற்கான மாநில அமைச்சராக இருந்தார்.[4] பின்னர் 1998-1999, 2000-2004 மற்றும் 2004-2009 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1991 முதல் 1996 வரை சுற்றுச்சூழல், வனத்துறை, மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சராகவும், 2004 முதல் 2006 வரை வெளியுறவுத் துறை அமைச்சராகவும் மற்றும் 2006 முதல் 2009 வரை பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
இவர் மே 2019 ஆம் ஆண்டு முதல் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை இணை அமைச்சராகப் (தனி பொறுப்பு) பதவி வகிக்கின்றார்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.