திட்டமிடல் அமைச்சகம், இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திட்டமிடல் அமைச்சகம் என்பது இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதற்கு பொறுப்பானவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி ஆவர். மேலும் ராவ் இந்தர்ஜித் சிங் இந்த அமைச்சகத்தின் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர் ஆவார்.[2] திட்டமிடல் அமைச்சகத்தின் கீழ் நிதி ஆயோக் செயல்படுகிறது.
Remove ads
வரலாறு
இந்தியா விடுதலை அடைந்த பிறகு வளர்ச்சித் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது தொடர்பாக 1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி ஐந்தாண்டுத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டி மத்திய திட்டக்குழு ஏற்படுத்தப்பட்டது. இந்தத் திட்டக் குழுவின் முதல் தலைவராக அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு இருந்தார். இந்நிலையில் 2014ஆம் ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு மத்திய திட்டக் குழுவை கலைத்துவிட்டு, மாநிலங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் புதிய குழு அமைக்கப்படும் என அறிவித்தார். இதன்படி 2015 சனவரி 1 அன்று திட்டக் குழுவுக்குப் பதிலாக நிதி ஆயோக் என்ற புதிய அமைப்பு இந்திய அரசால் உருவாக்கப்பட்டது.[3]
Remove ads
நிதி ஆயோக்
நிதி ஆயோக் அமைப்பின் தலைவராகப் இந்தியப் பிரதமர் செயல்படுவார். துணைத் தலைவராக திட்டமிடல் அமைச்சகத்தின் இணை அமைச்சரும் மற்றும் ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள்.[3]
நிதி ஆயோக் கீழ்மட்ட அணுகுமுறையைப் பயன்படுத்தி பொருளாதாரக் கொள்கை உருவாக்கும் செயல்பாட்டில் இந்திய மாநில அரசுகளின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதன் மூலம் கூட்டாட்சியை ஊக்குவிப்பதன் மூலம் இந்தியாவை மாற்றுவதற்கு மத்திய மற்றும் மாநிலங்களுக்கு ஆதரவளிப்பதாகும். நிதி ஆயோக்கின் ஆட்சி மன்றக் குழுவின் தலைவராக பிரதமரும், அனைத்து மாநிலங்களின் முதல்வர்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் துணை-நிலை ஆளுநர்களும் உள்ள்னர். நிதி ஆயோக்கிற்கு கூடுதலாக முன்னணி பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிலிருந்து தற்காலிக உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த உறுப்பினர்களில் ஒரு தலைமை நிர்வாக அதிகாரி, நான்கு அலுவல் உறுப்பினர்கள் மற்றும் இரண்டு பகுதி நேர உறுப்பினர்கள் உள்ளனர். இந்த முகமையின் துணைத் தலைவர் மூத்த அமைச்சருக்கு நிகரான தகுதியைப் பெறுகிறார்.
நிதி ஆயோக், மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்புகளுக்கு கொள்கை உள்ளீடுகளை வழங்குகிறது. அதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுப் பிரிவின் மூலம், பிரதமர் மற்றும் இந்திய வரவு-செலவு திட்ட மதிப்பாய்வை வழங்குவதற்கான அனைத்து தேசிய மற்றும் மாநில திட்டங்களையும் கண்காணிக்கிறது. நிதியமைச்சகத்தால் அங்கீகரிக்கப்படுவதற்கு முன், அனைத்து முக்கிய திட்டங்கள் குறித்த தனது கருத்துக்களையும் வழங்குகிறது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads