வங்சா மாஜு மக்களவைத் தொகுதி
From Wikipedia, the free encyclopedia
வங்சா மாஜு மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Wangsa Maju; ஆங்கிலம்: Wangsa Maju Federal Constituency; சீனம்: 峇都爱国会) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P116) ஆகும். இந்தத் தொகுதியில், ஒரு சதுர கி.மீ.-க்கு 13,000 பேருக்கு மேல் வசிக்கின்றனர். மலேசியாவில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளிலும், இந்தத் தொகுதி மட்டுமே அதிகமான மக்கள் தொகை அடர்த்தியைக் கொண்டுள்ளது.[4]
விரைவான உண்மைகள் மாவட்டம், வாக்காளர் தொகுதி ...
வங்சா மாஜு (P116) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Wangsa Maju (P116) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர் தொகுதி | வங்சா மாஜு தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; செதாபாக், கோம்பாக், தாமான் மெலாத்தி, |
முன்னாள்நடப்பிலுள்ள தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1994 |
கட்சி | பாக்காத்தான் |
மக்களவை உறுப்பினர் | ஜாகிர் அசான் (Zahir Hassan) |
வாக்காளர்கள் எண்ணிக்கை | 120,323 (2022)[1] |
தொகுதி பரப்பளவு | 16 ச.கி.மீ[2] |
இறுதி தேர்தல் | பொதுத் தேர்தல் 2022[3] |
மூடு
வங்சா மாஜு மக்களவைத் தொகுதி 1994-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1995-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1995-ஆம் ஆண்டில் இருந்து வங்சா மாஜு மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.