வடக்கு-தெற்கு விரைவுச்சாலை, தெற்கு வழித்தடம் (மலேசியா)
From Wikipedia, the free encyclopedia
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு வழித்தடம்
(ஆங்கிலம்: North–South Expressway Southern Route (E2); மலாய்: (Lebuhraya Utara–Selatan Jajaran Selatan) (E2) என்பது தீபகற்ப மலேசியாவின் வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்குப் பகுதி வழித்தடம் ஆகும். தீபகற்ப மலேசியாவின் தென்மேற்கு கடற்கரைக்கு இணையாகச் சரிசமமான நிலையில் செல்கிறது.
விரைவான உண்மைகள் Expressway 2, வழித்தட தகவல்கள் ...
Expressway 2 | |
---|---|
வடக்கு-தெற்கு விரைவுச்சாலை தெற்கு வழித்தடம் (மலேசியா) North–South Expressway Southern Route Lebuhraya Utara–Selatan Jajaran Selatan | |
வழித்தட தகவல்கள் | |
AH2 (நீலாய் வடக்கு–பாண்டான்-தெப்ராவ்) இன் பகுதி | |
பராமரிப்பு பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் PLUS Expressways Berhad | |
நீளம்: | 312 km (194 mi) |
பயன்பாட்டில் இருந்த காலம்: | 1981-தற்சமயம் – present |
வரலாறு: | 1994 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | ![]() |
| |
தெற்கு முடிவு: | ![]() |
அமைவிடம் | |
முதன்மை இலக்குகள்: | கோலாலம்பூர் சிராம்பான் மலாக்கா மாநகரம் மூவார் பத்து பகாட் ஜொகூர் பாரு |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
மூடு
இந்த விரைவுச்சாலை மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway) அமைப்பின் தெற்குப் பகுதியை நிறைவு செய்கிறது. இந்த விரைவுச்சாலையின் நீளம் 312-கி.மீ. (193-மைல்). தீபகற்ப மலேசியாவின் தெற்கு மாநிலங்களான சிலாங்கூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, ஜொகூர் மாநிலங்களின் வழியாக இந்தச் சாலை செல்கிறது.