கூட்டரசு சாலை 1 (மலேசியா)
கூட்டரசு சாலை 1 (Federal Route 1) என்பது மலேசியாவின் முதல் நெடுஞ்சாலை; மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் வி / From Wikipedia, the free encyclopedia
கூட்டரசு சாலை 1 (Federal Route 1) என்பது மலேசியாவின் முதல் நெடுஞ்சாலை; மிகப் பழமையான நெடுஞ்சாலையாகவும் விளங்குகிறது. இதுவரை தீபகற்ப மலேசியாவில் அமைக்கப்பட்ட தொடக்கக்கால பொது சாலைகளில் மிகப் பழமையானது. கூட்டரசு சாலை 1 என்பது வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப் படுவதற்கு முன்னர், தீபகற்ப மலேசியாவின் மேற்கு மாநிலங்களின் சாலை அமைப்பில் முதுகெலும்பாக விளங்கியது.[1]
கூட்டரசு சாலை 1 | |
---|---|
வழித்தட தகவல்கள் | |
AH2 ஜித்ரா புக்கிட் காயூ ஈத்தாம்) AH142 (சிகாமட்–யோங் பெங் தென்முனை சந்திப்பு) இன் பகுதி | |
நீளம்: | 992.6 km (616.8 mi) |
வரலாறு: | முடிக்கப்பட்டது 1939 |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | புக்கிட் காயூ ஈத்தாம், கெடா |
சாலைகள் கூட்டரசு சாலை 284 (மலேசியா) | |
தெற்கு முடிவு: | ஜொகூர் பாரு, ஜொகூர் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
|
கூட்டரசு சாலை 1 என்பது தீபகற்ப மலேசியாவில் உள்ள மூன்று வடக்கு - தெற்கு நெடுஞ்சாலைகளில் ஒன்றாகும். தவிர மேலும் இரண்டு கூட்டரசு சாலைகள் உள்ளன. கூட்டரசு சாலை 3; கூட்டரசு சாலை 5.[2]
மலேசியா-சிங்கப்பூர் எல்லை நகரமான ஜொகூர் பாருவில் தொடங்கும் கூட்டரசு சாலை 1-இன் ’0’ கிலோமீட்டர் தஞ்சோங் புத்திரி சிஐக்யூ வளாகத்தில் (Tanjung Puteri CIQ Complex) தொடங்குகிறது. இப்போது அந்த வளாகம் இப்போது இடிக்கப்பட்டு விட்டது.