![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/ta/thumb/2/26/2011_Cricket_World_Cup_Logo.svg/langta-640px-2011_Cricket_World_Cup_Logo.svg.png&w=640&q=50)
2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை
2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை / From Wikipedia, the free encyclopedia
2011 துடுப்பாட்ட உலகக்கோப்பை இந்தியா, இலங்கை, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் நடைபெற்றது. உலகக்கிண்ணத்துக்கான ஆரம்ப நிகழ்வு டாக்கா நகரில் வங்கபந்து தேசிய அரங்கத்தில் 2011 பெப்ரவரி 17 ஆம் நாள் இடம்பெற்றது. முதலாவது போட்டி 2011 பெப்ரவரி 19 இல் டாக்கா நகரில் சேர்-இ-பங்களா துடுப்பாட்ட அரங்கத்தில் வங்காளதேச அணி இந்திய அணியை எதிர்த்து விளையாடியது. இறுதிப் போட்டி மும்பையில் வான்கேடே அரங்கத்தில் 2011 ஏப்ரல் 2 இல் நடைபெற்றது. இந்திய அணியும் இலங்கை அணியும் இறுதி ஆட்டத்துக்குத் தெரிவாகின. இந்திய அணி இலங்கையை 6 இலக்குகள் வித்தியாசத்தில் வென்று உலகக்கிண்ணத்தைக் கைப்பற்றியது.[1]
![]() | |
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் |
போட்டித் தொடர் வடிவம் | தொடர் சுழல்முறை, வெளியேற்றம் |
நடத்துனர்(கள்) | ![]() ![]() ![]() |
வாகையாளர் | ![]() |
மொத்த பங்கேற்பாளர்கள் | 14 (104 அணிகளில் இருந்து) |
மொத்த போட்டிகள் | 49 |
தொடர் நாயகன் | ![]() |
அதிக ஓட்டங்கள் | ![]() |
அதிக வீழ்த்தல்கள் | ![]() ![]() |
அலுவல்முறை வலைத்தளம் | 2011 உலகக்கிண்ணம் |
← 2007 2015 → |
உலகக்கிண்ணப் போட்டிகள் அனைத்தும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டத் தகுதியில் ஒவ்வொன்றும் 50 பந்துப் பரிமாற்றங்களுடன் நடைபெற்றன. இப்போட்டியில் 10 தேர்வுத் துடுப்பாட்ட அணிகளும், தேர்வுத் தகுதி பெறாத 4 அணிகளுமாக மொத்தம் 14 நாடுகளைச் சார்ந்த அணிகள் பங்குபற்றிய 49 போட்டிகள் நடைபெற்றன. 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பையின் போது பங்கு பற்றியதை விட இரண்டு அணிகள் இம்முறை குறைவாக பங்குபற்றின. மொத்தப் போட்டிகள் 2007 துடுப்பாட்ட உலகக்கோப்பை போட்டிகளைவிட இரண்டு குறைவானதாகும்.
இந்த உலகக்கிண்ணப் போட்டிகளை பாக்கித்தானும் உடனாக ஏற்று நடத்துவதாக இருந்தது. 2009ஆம் ஆண்டு லாகூரில் இலங்கைத் துடுப்பாட்ட அணியினர் சுடப்பட்ட நிகழ்வை அடுத்து பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை பாக்கித்தானின் நடத்தும் உரிமைகளை இரத்து செய்தது.[2] லாகூரில் திட்டமிடப்பட்ட அமைப்புக்குழுவின் தலைமையகமும் மும்பைக்கு மாற்றப்பட்டது.[3] பாக்கித்தான் 14 ஆட்டங்களை, ஓர் அரையிறுதி உட்பட, நடத்துவதாக இருந்தது.[4] அவற்றில் எட்டு இந்தியாவிற்கும் நான்கு இலங்கைக்கும் இரண்டு வங்காள தேசத்திற்கும் பிரித்துத் தரப்பட்டன..[5]