அகப்பொருள் மாந்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகப்பொருள் என்பது உலகியல் வழக்கத்துக்கும் நாடக வழக்கத்துக்கும் பொருந்திவருமாறு பின்னப்பட்டதோர் வாழ்க்கைக் களஞ்சியம். இதில் உள்ள அகப்பொருள் தலைவர்கள், அகப்பொருள் வாயில்கள் ஆகியோர் அகப்பொருள் மாந்தர் ஆவர்.
- தனிச் சிறப்பு
- இந்த அகப்பொருள் மாந்தர்களின் இயற்பெயர்கள் குறிப்பிடப்படுவதில்லை. இயற்பெயர் குறிப்பிடப்பட்டால் அவர்கள் புறப்பொருள் மாந்தர் ஆகிவிடுவர்.
- அகப்பொருள் தலைவர்கள்
- அகப்பொருள் வழக்கில் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் ஆண்மகனைத் தலைவன், தலைமகன், கிழவன், கிழவோன் என்பர்.
- பெண்மகளைத் தலைவி. தலைமகள், கிழவோள், கிழத்தி என்பர்.
- காமக் கிழத்தியர் தலைவனை மணப்பவர்.
- அகப்பொருள் வாயில்கள்
- அகம் என்பது அகப்பொருள் தலைவர்கள் வாழும் இல்லம். கட்டப்பட்ட இல்லத்துக்கு முன்றில், நுழைவாயில், புழைக்கடை என்னும் வாயில்கள் இருப்பது போல அகத்திணைத் தலைவர்களாகிய தலைவன் தலைவியரின் அகமாகிய உள்ளங்கள் ஒன்றிலொன்று நிலையாக நுழைந்திருப்பதற்கு வாயில்களாகச் சிலர் இருப்பர். அவர்கள் தோழி, தாய், செவிலி, பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத்தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகியோர். இவர்களைச் சிறப்புடை மரபின் வாயில்கள் என்பர். [1]
- களவு வாழ்க்கையினை உரையாடுவோர்
- பார்ப்பான், பாங்கன், தோழி, செவிலி, கிழவன், கிழத்தி என்னும் ஆறு பேர் களவு வாழ்க்கையினை உரையாடும் அறுவரும். [2]
- கற்பு வாழ்க்கையினை உரையாடுவோர்
- பாணன், கூத்தன், விறலி, ,ஞானம் சான்ற அறிவர், கண்டோர்,கற்பு வாழ்க்கையினை
உரையாடும் அறுவரும் [3]
Remove ads
அடிக்குறிப்பு
காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads