விருந்தினர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
விருந்தினர் என்போர் விருந்தாளிகள். இவர்களை வடநூலார் ‘அதிதி’ என்பர். [1] தமிழ்நெறி வாழ்க்கையில் விருந்தினர் வெறுமனே விருந்துண்டு செல்பவர்கள் அல்லர். கற்பியல் வாழ்க்கையில் தலைவன், தலைவியர் கூடி வாழ உதவி புரியும் வாயில்களாகவும் விளங்கினர்.
- சொல்விளக்கம்
- விருந்து என்னும் சொல்லே விருந்தினரைக் குறிக்கும். [2]
- நூலுக்கு உரிய வனப்புகள் எட்டில் ஒன்று விருந்து (புதுமை) என்னும் வனப்பு
- அகவாழ்வில் விருந்தினர்
தலைவியின் ஊடலைத் தணிக்கும் வாயில்களில் ஒருவர் விருந்தினர். [3] விருந்து வந்தால் களவு ஒழுக்கமும் தடைபடும். [4] தலைவி ஊடாமல் இருந்தால் தலைவன் விருந்தினரோடு வருவது வழக்கம். [5] தலைவியின் மாண்புகளில் ஒன்று விருந்தோம்பல். [6]
- புறவாழ்வில் விருந்தினர்
இல்லறத்தார் பேணவேண்டிய ஐவருள் ஒருசாரார் விருந்தினர். [7] விருந்தோம்பல் பற்றித் திருக்குறள் சிறப்பாக எடுத்துரைக்கிறது.[8]
Remove ads
அடிக்குறிப்புகள்
காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads