சிரோமணி அகாலி தளம்

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

சிரோமணி அகாலி தளம்
Remove ads

அகாலி தளம் என அழைக்கப்படும் சிரோமணி அகாலி தளம் (Shiromani Akali Dal) பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓர் அரசியல் கட்சியாகும். இது சீக்கிய மதத்தையும் சீக்கியர்களின் நலனையும் முன்னெடுப்பதற்கென ஆரம்பிக்கப்பட்டது. 1920இல் சிரோமணி குருத்வாரா பிரபந்த செயற்குழு ஆரம்பிக்கப்பட்ட பிறகு இக்கட்சி ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் தலைவராக சர்முக் சிங் சப்பால் இருந்தார், மாஸ்டர் தாரா சிங் தலைமையேற்ற பின்பே இக்கட்சி பலம் மிக்கதாக மாறியது.[சான்று தேவை]

விரைவான உண்மைகள் சிரோமணி அகாலி தளம் ਸ਼੍ਰੋਮਣੀ ਅਕਾਲੀ ਦਲ, மக்களவைத் தலைவர் ...

1947 இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கு பின் இந்திய பகுதி பஞ்சாபானது, கிழக்கு பஞ்சாப் எனவும் பாகிஸ்தான் பகுதி பஞ்சாப், மேற்கு பஞ்சாப் எனவும் அழைக்கப்படலாயிற்று. சீக்கிய மதத்தவர்கள் பெருன்பான்மையாக கொண்ட மாநிலம் அமைப்பதற்காக இக்கட்சி போராடியது. 1966 ல் கிழக்கு பஞ்சாப், பஞ்சாப், அரியாணா, இமாச்சல பிரதேசம் என மூன்று மாநிலங்களாக பிரிக்கப்பட்டது, இதில் பஞ்சாப் மாநிலம் சீக்கிய மதத்தை சார்ந்தவர்களை பெரும்பான்மையாக கொண்டிருந்தது.

கருத்து வேறுபாடுகள் காரணமாக இக்கட்சி பல குழுக்களாக சிதறியுள்ளது. ஒவ்வொரு குழுவும் தங்களையே உண்மையான அகாலி தளம் என கூறி வருகின்றன. இவற்றில் பெரிய பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான குழுவையே 2003 ல் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமான அகாலி தளமாக அங்கிகரித்தது. 1999 ல் குருசரன் சிங் தோரா தலைமையில் சர்ப் ஹிந் சிரோன்மணி அகாலி தளம் என்ற பெயரில் புதிய குழு உண்டாகியது, இது 2003 ல் பாதல் தலைமையிலான குழுவுடன் இணைந்து விட்டது. மகாராஜா காப்டன் அமிரிந்தர் சிங் தலைமையிலான சிரோன்மணி அகாலி தளம் பன்திக் பின்பு இந்திய தேசிய காங்கரஸுடன் இணைந்து விட்டது.

தற்போது ஆறு குழுக்கள் அகாலி தளம் தங்களை உண்மையான அகாலி தளம் என கூறுகின்றன. அவை சிரோன்மணி அகாலி தளம்' (பாதல்), சிரோன்மணி அகாலி தளம்(சிம்ரஞ்சித் சிங் மான்), சிரோன்மணி அகாலி தளம் தில்லி, அரியானா மாநில அகாலி தளம், சிரோன்மணி அகாலி தளம் (ஐக்கிய இராஜ்ஜியம்), சிரோன்மணி அகாலி தளம் அம்ரிஸ்டர் (பஞ்ச் பர்தனி).

2007 பிப்ரவரியில் நடைபெற்ற பஞ்சாப் சட்டமன்ற தேர்தலில் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அகாலி தளம் 48 தொகுதிகளை கைப்பற்றி சட்டமன்றத்தில் தனிப்பெருங்கட்சியாக விளங்கியது. இதன் கூட்டணி கட்சியான பாஜக வுடன் இணைந்து ஆட்சி அமைத்துள்ளது.

அமரிந்தர் சிங் அற்போது முதலமைச்சராக இருந்தார்.[7]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads