மாநிலங்களவை

இந்திய நாடாளுமன்ற மேலவை From Wikipedia, the free encyclopedia

மாநிலங்களவை
Remove ads

இந்தியாவில் மாநிலங்களவை (Council of States) அல்லது ராஜ்ய சபா (Rajya Sabha) என்பது இந்திய நாடாளுமன்றத்தில் அதிகபட்சம் 250 உறுப்பினர்களைக் கொண்ட மேலவை ஆகும். தற்போது மாநிலங்களவையில் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 12 உறுப்பினர்கள் இந்தியக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்கள். கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு, தொழில் போன்ற துறைகளில் சிறந்து விளங்குபவர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார். இந்த 12 பேரைத் தவிர்த்து மற்றவர்கள் இந்திய மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாச்சார பிரதிநித்துவ முறையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விரைவான உண்மைகள் மாநிலங்களவை, வகை ...

மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலவையின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை முடிவடையும். மாநிலங்களவைத் தலைவராக குடியரசுத் துணைத்தலைவர் பதவி வகிப்பார்.

மாநிலங்களவை கூட்டங்கள் மக்களவை கூட்டங்களைப் போல் அல்லாமல் தொடர்ச்சியாக நடைபெறும். கலைக்க முடியாத ஒரு நிரந்தர அமைப்பாக இது உள்ளது. இதன் அதிகாரங்கள் மக்களவைக்கு ஈடானதாகவும் மக்களவையை விட அதிகாரம் குறைந்ததாவும் கருதப்படுகின்றது. இரு அவைகளினாலும் எதிரொலிக்கும் சர்ச்சைகளுக்கு இரு அவைகளின் கூட்டுக் கூட்ட அமர்வின் மூலம் தீர்வு காணப்படுகின்றது. இவ்வாறு நடைபெறும் கூட்டுக் கூட்டங்களில் மக்களவை மாநிலங்களைவையை விட இரு மடங்கு உறுப்பினர்களை கொண்டதாக இருப்பினும், மாநிலங்களவை உண்மையான நடப்பிலுள்ள (defacto) வீட்டோ அதிகாரங்களை கொண்டதாக கூட்டுக் கூட்டங்களில் கருதப்படுகின்றது. [சான்று தேவை]

மாநிலங்களவையின் தற்போதைய அலுவல் நிலை (ex-officio) கூட்டத் தலைவராக இந்திய துணை குடியரசுத் தலைவராக சகதீப் தன்கர் பொறுப்பேற்றுள்ளார். துணைக் கூட்டத் தலைவர் அவ்வப்பொழுது நடைபெறும் கூட்டங்களின் தன்மைக்கேற்ப தற்காலிமாக கூட்டத்தலைவர் இல்லாத பொழுது பொறுப்பேற்கின்றனர்.

மாநிலங்களவையின் முதல் கூட்டம் மே 13, 1952 அன்று துவக்கப்பட்டது.

Remove ads

மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கான தகுதிகள்

ஒருவர் மாநிலங்களவை உறுப்பினர் ஆவதற்கு இந்தியக் குடிமகனாக இருத்தல் அவசியம். 30 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவராகவும், நல்ல மனநிலையுடன், கடனாளியாக இல்லாதிருத்தல் அவசியமாகும். குற்றமற்றவர் அல்லது குற்றமுறு செயலில் ஈடுபடாதவர் என்பதை தன் ஒப்புதல் வாக்குமூலத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

மாநிலம் வாரியாக உறுப்பினர்கள்

உறுப்பினர்கள் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர்களால் ஒவ்வொரு மாநிலத்திலுருந்தும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இம்முறை கனேடிய செனட் மற்றும் ஜெர்மனி பந்தர்ஸ்ரேட் ஆகிய மன்றங்களின் தேர்ந்தெடுக்கும் முறைகளின்படி இங்கும் பின்பற்றபடுகின்றது. இதன் இருக்கைகள் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்திற்கேற்றார்போல் அதன் மக்கள் தொகை, பரப்பளவு இவற்றின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு அதிக இடங்களும் சிறிய மாநிலங்களுக்கு குறைவான இருக்கைகளும் சரிசம பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டுள்ளது. 2006 இன்படி இதன் இருக்கைகள் கீழ்கண்டவாறு ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலக இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-20 at the வந்தவழி இயந்திரம்:

Remove ads

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads