அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி
Remove ads

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தமிழ்த் திரைப்பட நடிகர் சரத்குமாரால் ஆகஸ்ட் 31, 2007 அன்று தொடங்கப்பட்ட ஒரு தமிழக அரசியல் கட்சியாகும். இக்கட்சி காமராஜர், எம்ஜிஆர், அப்துல் கலாம் ஆகியோரின் சிந்தனைகளை, கொள்கைகளை, வழிகாட்டல்களை முன்னெடுத்து செயல்படும் என்று சரத்குமார் தெரிவித்தார். கட்சி நிறுவப்பட்ட நாளிலிருந்து 12 மார்ச் 2024 வரை சரத்குமார் கட்சியின் தலைவராக இருந்தார். 12 மார்ச் 2024 அன்று, அதன் நிறுவனர் சரத்குமாரால் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, நிறுவனர் ...
Remove ads

2011 தேர்தல்

சரத்குமார் தனது ஆரம்பகால அரசியல் வாழ்க்கையில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தார்.[1] பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் (அதிமுக) சேர்ந்தார். பின்னர் அவர் அதிமுகவிலிருந்து விலகி 31 ஆகத்து 2007 அன்று தனது சொந்த அரசியல் கட்சியான அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைத் தொடங்கினார். இக்கட்சி 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் தென்காசி மற்றும் நாங்குநேரி ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.[2][3] தென்காசியில் சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் ஏ. நாராயணனும் வெற்றி பெற்றனர்.[4]

Remove ads

கட்சி கலைப்பு

12 மார்ச் 2024 அன்று, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி அதன் நிறுவனர் சரத்குமாரால் பாரதிய ஜனதா கட்சியில் இணைக்கப்பட்டது. சென்னையில் நடந்த இந்த இணைப்பிற்கு தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தலைமை தாங்கினார்.[5]

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads