அகுஜாசெராடாப்ஸ்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகுஜாசெராடாப்ஸ் (Agujaceratops) (பொருள்: அகுஜாவில் இருந்து கொம்புள்ள முகம்) என்பது, புதிதாக வகைப்படுத்தப்பட்ட, செராடாப்சியா தொன்மாப் பேரினம் ஆகும். முன்னர் 1989 இல் லெஹ்மன் என்பவரால் விபரிக்கப்பட்டு சாஸ்மோசோரஸ் மாரிஸ்கலென்சிஸ் என அறியப்பட்டது[1]. 2006 இல், லூக்காசும், சலிவனும் ஹண்ட்டும் இதனைப் புதிய பேரினத்துக்கு மாற்றியுள்ளனர். இதன் புதை படிவங்கள் கிடைத்த இடங்களை ஆராய்ந்த லெஹ்மன், அங்குள்ள படிவுகளை வைத்து அகுஜாசெரடாப்சுகள் சதுப்பு நிலங்களில் வாழ்ந்திருக்கக் கூடும் எனக் கூறுகிறார். இவை சுமார் 70-83 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிந்திய கிரீத்தேசஸ் காலத்தின் கம்பானியக் காலப் பகுதியில் வாழ்ந்தன[2].
Remove ads
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads