உயிரியல் வகைப்பாடு

From Wikipedia, the free encyclopedia

உயிரியல் வகைப்பாடு
Remove ads

வகைபாட்டியல் (taxonomy) என்பது (பண்டைக் கிரேக்கம்: τάξις taxis, "ஏற்பாடு", -νομία -nomia, "முறை"[1] எனும் சொற்களில் இருந்து பெறப்பட்ட சொல். உயிரிகள் தமக்குள் பகிரும் பான்மைகளைப் பொறுத்து அவற்றை வரையறுக்கவும் பெயரிடவும் பயன்படுவது அறிவியல் ஆகும். உயிரிகள் பலவகையன்களாக ஒருங்கிணைத்துப் பிரிக்கப்படுகின்றன. இந்த வகையன்கள் எனும் குழுக்கள் ஒவ்வொன்றுக்கும் வகைபாட்டியல் தரவரிசை தரப்படுகிறது. இப்படி தரவரிசை தரப்பட்ட குழுக்களை மேலும் ஒருங்கிணைத்து மேனிலைக் குழுக்களாக உயர் தரவரிசையில் வைக்கப்படுகின்றன. இவ்வாறு வகைபாட்டியல் படிநிலை உருவாக்கப்படுகிறது.[2][3] சுவீடிய தாவரவியலாளராகிய கார்ல் இலின்னேயசு உயிரியலுக்கான வகைபாட்டியலின் தந்தையாக்க் கருதப்படுகிறார், உயிரிகளைப் பகுப்பதற்கும் இருபடிநிலைப் பெயரிடலுக்குமான இவரது வகைபாட்டு அமைப்பு இலின்னேயசு வகைப்பாடு எனப்படுகிறது.

Thumb
உயிரியல் வகைப்பாடு

இவ்வாறு, அழிந்துபோன மற்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரிகளை வகைப்படுத்துதலை, உயிரியலாளர்கள், உயிரியல் வகைப்பாடு (biological classification) எனக் குறிப்பிடுகிறார்கள். கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) என்பவர் உயிரிகளை அவற்றின் பொதுவான புறநிலைத் தோற்றத்தின் (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால உயிரியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். டார்வினுடைய பொது மரபுவழிக் கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, அதற்கு ஏற்ப கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் சில திருத்தங்கள் செய்யவேண்டி நேர்ந்தது.[4] மூலக்கூறு வகைபாட்டியலின் (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் உயிரியல் வகைபாட்டில் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொகுதி மரபியல், கிளைபிரிவியல் அல்லது கவைபிரிவியல், அமைப்புசார் வகைபாட்டியல் போன்ற அண்மைக்கால அறிவியல் புலங்கள் தோன்றி வளர்ந்ததும், இலின்னேயசு உயிரியல் வகைபாட்டு அமைப்பு உயிரிகளின் படிமலர்ச்சி உறவுகளை அடிப்படையாகக் கொண்டு, புத்தியல் உயிரியல் வகைபாடாக படிமலர்ந்தது. வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் வகைப்பாட்டியல் (biological systematics) என்பது முதன்மை வாய்ந்த அறிவியல் வகைபாட்டு முறைகளில் ஒன்றாகத் திகழ்கிறது...

Remove ads

வரையறை

Thumbதொல்பாக்டீரியாAquifexThermotogaPlanctomycesGreen filantous bacteriaPyrodicticumThermococcus celerMethanobacteriumHalophiles
பரிணாமத்தோற்ற மரபியல் நெறிமரம்

உயிரியல் வகைப்பாட்டை வரையறுத்தவர் எர்ணஸ்ட் மாயர் ஆவார்[5]. அவரால் கொடுக்கப்பட்ட வரையறை, "ஒன்றையொன்று ஒத்திருக்கும் உயிரினங்களை ஒரு வகையனில் அடக்கி, அவற்றை ஒரு படிநிலையில் வைத்தலும், ஒன்றையொன்று ஒத்த, அல்லது தொடர்புகொண்ட வெவ்வேறு வகையன்களை ஒன்றிணைத்து, அதற்கு மேலான ஒருபடிநிலையில் வைத்தலும் போன்ற வகையில் வெவ்வேறு படிநிலைகளில் ஒழுங்குபடுத்துதலே உயிரியல் வகைப்பாடு எனப்படும்". என்பதாகும்...

அண்மித்த ஒரு பொதுவான மூதாதையருடன் பகிர்ந்துகொள்ளப்படும் பொதுவான மரபுபேற்று இயல்புகளின் அடிப்படையிலேயே இத்தகைய ஒழுங்குபடுத்தல் அல்லது வரிசைப்படுத்தல் மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி, அமைப்பொத்த (homologous) உயிரினங்களில் ஒரு பொது மூதாதையிலிருந்து மரபுபேற்றுவழிப் பெறப்படும் ஒத்த இயல்புகளே மிக முதன்மையானதாகக் கருத்தில் கொள்ளப்படும்.[6]. இங்கு ஒரு பொது மூதாதையைக் கொண்டிராத வெவ்வேறு உயிரினங்களில் இருக்கக் கூடிய செயலொத்த (analogous) இயல்புகள் கருத்தில் கொள்ளப்படுவதில்லை. எ. கா. பறவையும், வெளவாலும் பறக்கும் இயல்பையும், அதற்கான ஒத்த உறுப்பையும் கொண்டிருந்தாலும், அவை ஒரே மூதாதையிலிருந்து மரபுவழியில் பெறப்படாத ஒரு இயல்பாக இருப்பதனால், அவற்றை ஒரே வகுப்பிற்குள் அடக்குவதில்லை. அதேவேளை வெளவாலும், திமிங்கிலமும் பல வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும், அவற்றின் இளம் வழித்தோன்றல்களுக்குப் பாலூட்டும் இயல்பானது, ஒரு பொது மூதாதையிலிருந்து பெறப்பட்டதாக இருக்கின்றமையினால், அவை இரண்டும் பாலூட்டிகள் என்ற பொதுவான வகுப்பிற்குள் சேர்க்கப்பட்டுள்ளன.

வகைபாட்டியலின் வரையறை அத்தகவலைப் பெறும் வாயிலுக்கேற்ப வேறுபடுகிறது. என்றாலும் வரையறையின் சாரம் ஒன்றாகவே அமைகிறது; அதாவது உயிரிசார் கருத்துப்படிமமும் பெயரிடல் மரபும் வகைப்படுத்தலும் மாறுவதில்லை.[7] மேற்கோள் கருத்துகளாக, அண்மையில் வெளிவந்த சில வரையறைகள் கீழே தரப்படுகின்றன:

  1. குறிப்பிட்ட இனத்தின்/சிறப்பினத்தின் தனி உயிரிகளை இனமாக குழுநிலைப்படுத்தல், அந்தக் குழுக்களுக்குப் பெயர்களிட்டுப் பின் , அதன்வழி வகைபாட்டை உருவாக்குதல் சார்ந்த கோட்பாடும் நடைமுறையும் வகைப்பாட்டியலாகும்,[2]
  2. அமைப்புசார் வகைபாட்டியலின் பேருறுப்பாக, விவரித்தல், இனங்காணல், பெயரிடல், வகைபடுத்தல் ஆகியவற்றை உள்ளடக்கும் அறிவியல் புலம் வகைபாட்டியலாகும்.[3]
  3. உயிரிகளின் ஏற்பாட்டை வகைபடுத்தும் உயிரியல் வகைபாட்டு அறிவியல் புலம் வகைபாட்டியலாகும்.
  4. "இன உருவாக்கத்தின் காரணம் போன்றவற்றை ஆய்வதை உள்ளடக்கிய உயிரிகளை வகைபடுத்தும் அறிவியல் புலம் வகைபாட்டியலாகும்"[8].
  5. "வகைபாட்டுக்காக உயிரிகளின் பான்மைகளை பகுத்தாயும் புலம் வகைபாட்டியலாகும்"[9].
  6. "[அமைப்புசார் வகைபாட்டியல்] என்பது உயிரிகளை வகைபடுத்தவும் பெயரிடவும் தேவையான பாணியைக் கண்டறிய தொகுதி மரபியலை ஆயும் மேலும் விரிந்த புலம் வகைபாட்டியலாகும்" (இதுதேவை சார்ந்த ஆனால் இயல்புக்கு மாறான வரையறை)[10]

மேற்கூறிய பல்வேறு வரையறைகள் வகைபாட்டியலை அமைப்புசார் வகைபாட்டியலின் உட்புலமாக (வரையறை-2) அல்லது மறுதலையாக அவ்வுறவைத் தலைக்கீழாக்குவதாக, அல்லது இரண்டைiயும் ஒத்த பொருண்மை கொண்டதாக்க் கருதுவதைக் காணலாம். மேலும் இவற்றில் வகைபாட்டியலில் உயிரியல் பெயரிடலை வரையறைக்குள் அடக்குவதில் சிலவற்றிலும் (வரையரை-1, வரையறை-2) அல்லது அதை அமைப்புசார் வகைப்பாட்டியலின் ஒரு பகுதியாக நோக்குவதிலும் உள்ள இசைவின்மையை காண முடிகிறது, .[11] எடுத்துகாட்டாக, ஆறாம் வரையறையானது, அமைப்புசார் வகைபாட்டியலின் பின்வரும் வரையறையோடு இணைவாக அமைந்து பெயரிடலை வகைபாட்டியலுக்கு வெளியே கொண்டுசெல்வதைக் காணலாம்:[9]

  • அமைப்புசார் வகைபாட்டியல் என்பது "உயிரிகளை இனங்காணல், வகைபடுத்தல், பெயரிடல் ஆகியவற்றை, அவற்றின் இயற்கை உறவுகள் சார்ந்தும் வகையன்களின் வேறுபடுதலையும் படிமலர்ச்சியையும் உள்ளடக்கியும் ஆயும் அறிவியல் புலமாகும்".

வகைப்பாட்டியல், அமைப்புசார் உயிரியல், அமைப்புசார் வகைபாட்டியல், உயிர்சார் வகைபாட்டியல் அறிவியல் வகைபாடு, உயிரியல் வகைபாடு, தொகுதிமரபியல் எனும் சொற்களின் ஓட்டுமொத்தக் கணம், சிலவேலைகளில் ஒன்றின் மீது ஒன்று படிந்தமைதலை, அதாவது சிலவேளைகளில் அவை ஒன்றியும் சிலவேளைகளில் அவை சற்றே வேறுபட்டும், ஆனல் எப்போது உறவுடனும் இடைவெட்டியும் அமையும் பொருளுடன் விலங்குவதைக் காணலாம்.[7][12] "வகைபாட்டியல்" புலத்துக்கான பரந்து விரிந்த பொருள் இங்கே சுட்டப்பட்டது. இந்தச் சொல் 1913 இல் கண்டோல் என்பவரால் அவரது Théorie élémentaire de la botanique எனும் நூலில் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[13]

Remove ads

தற்கால வளர்ச்சிகள்

Thumb
உயிரியல் வகைப்பாடு

1960 களிலிருந்து, வகைப்பாட்டு அலகுகளை (taxon) படிவளர்ச்சி மர அமைப்பில் ஒழுங்கு படுத்தும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வகைப்பாட்டு அலகு, ஏதாவது உயிரின மூதாதையின் எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிருப்பின், அது ஒருவழித்தோற்றம் (monophyletic) எனப்படும். மாறாக மிகக்கிட்டிய பொது மூதாதை ஒன்றைக் கொண்டிருந்து, எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிராவிட்டால் அது paraphyletic எனப்படும். வகைப்பாட்டு அலகொன்றில் அடங்கும் உயிரினங்களின் பொது இயல்புகள் தனித்தனியாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் கூர்ப்பு அடைந்திருப்பின் அவ்வலகு, பல்தொகுதிமுறைத் தோற்றம் (polyphyletic) எனப்படும்.

வகைப்பாட்டியலில் ஆட்சிகள் ஒப்பீட்டளவில் அண்மைக்காலப் பகுப்புகள் ஆகும். மூன்று-ஆட்சி முறைமை (three-domain system) 1990 இல் உருவாக்கப்பட்டுப் பின்னரே ஏற்பு பெற்றது. இன்று பெரும்பான்மையான உயிரியலாளர்கள் மூன்று-ஆட்சி முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனினும் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஐந்து திணைப் பகுப்பு முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.

Remove ads

லின்னேயசின் இருபடிநிலை வகைப்பாடு

லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:

  1. திணை (இராச்சியம்; kingdom);
  2. வகுப்பு (class);
  3. வரிசை (order);
  4. பேரினம் (genus);
  5. இனம் (species).

திணைகள் (இராச்சியங்கள்), பிளாண்டே (plantae – "தாவரங்கள்"), அனிமேலியா (animalia – "விலங்குகள்") என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

ஏழு படிநிலை வகைப்பாடு

Thumb
வகுப்பு மட்டத்தில் முதுகெலும்பியின் கூர்ப்பு, கதிர்களின் அகலம் குடும்பங்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. கதிர்ப்படமானது கூர்ப்பு வகைப்பாட்டியலின் குறிப்பிடத்தக்க மாதிரியாகும்
Thumb
தொடர்புகளைக் காட்டும் பாகுபாட்டு வரைபடம்

லின்னேயசின் ஐந்து படிகளுடன் மேலும் இரண்டு படிகளைச் சேர்த்துத் தற்கால வகைப்பாடு ஏழு படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது.

  1. திணை(இராச்சியம்; kingdom);
  2. தொகுதி (phylum) – பிரிவு (division; தாவரங்களுக்கு));
  3. வகுப்பு (class);
  4. வரிசை (order);
  5. குடும்பம் (family);
  6. பேரினம் (genus);
  7. இனம் (species).
Remove ads

பெயர் முடிப்பு

பேரினங்களுக்கு மேலுள்ள படிநிலைகளில் வகைப்பாட்டு அலகுகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் முடிவடையுமாறு ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள அட்டவணை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

மேலதிகத் தகவல்கள் படிநிலை, தாவரங்கள் ...
Remove ads

உயிரியல் இராச்சியங்களின் வகைப்பாடு

மேலதிகத் தகவல்கள் லின்னேயசு 1735, ஹேக்கல் 1866 ...
Remove ads

அங்கீகாரம் (ஆசிரியர் சான்று)

அங்கீகாரம் ஆனது விஞ்ஞானப் பெயருக்கு அடுத்ததாகக் குறிப்பிடப்படும். இங்கு அங்கீகாரம் என்பது அவ் விஞ்ஞானப் பெயரை சரியாகக் குறிப்பிட்டு வெளியிட்ட விஞ்ஞானியினது பெயராகும். உதாரணமாக 1758 இல் கரோலஸ் லின்னேயஸ் (Linnaeus) ஆசிய யானைக்கு Elephas maximus என்ற விஞ்ஞானப் பெயரைக் கொடுத்தார். ஆகவே இப் பெயரானது சில வேளைகளில் "Elephas maximus Linnaeus, 1758" எனவும் எழுதப்படுகின்றது. இம் முறையில் விஞ்ஞானிகளின் பெயர்களை அவ்வப்போது சுருக்கமாகவும் குறிப்பிடப்படுகின்றது. உதாரணமாக லி = L. என்ற சுருக்க எழுத்தானது கரோலஸ் லின்னேயஸைக் குறிக்குமென உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு தாவரவியலில் நிலையான சுருக்கப்பெயர்களைக் கொண்ட நெறிமுறைப்படுத்தப்பட்ட பட்டியலும் உள்ளது. (பார்க்க தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறை) அங்கீகாரம் ஒதுக்கப்படும் விதமானது விலங்கியலுக்கும் தாவரவியலுக்கும் இடையில் சற்று வேற்படுகின்றது.

Remove ads

இலங்கை வழக்குச் சொற்கள்

  • Domain – பேரிராச்சியம்
  • Kingdom – இராச்சியம்
  • Phylum/Division – கணம்/ பிரிவு
  • Class – வகுப்பு
  • Order – வருணம்
  • Family – குடும்பம்
  • Genus – சாதி
  • Species – இனம்

தமிழக வழக்குச் சொற்கள்

  • Domain – பேருலகம்
  • Kingdom – உலகம்
  • Phylum/Division – தொகுதி/பிரிவு
  • Class – வகுப்பு
  • Order – வரிசை/ஒழுங்கு
  • Family – குடும்பம்
  • Genus – பேரினம்
  • Species – சிறப்பினம்/இனம்/சிற்றினம்

வெளியிணைப்புகள்

மேற்கோள்கள்

இவற்றையும் காணவும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads