அசாசின்களின் வரிசை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசாசின்கள் என்பவர்கள் சியா இஸ்லாமைச் சேர்ந்த நிசாரி இசுமாயிலி பிரிவினர் ஆவர். இவர்கள் 1090 மற்றும் 1275 ஆண்டுகளுக்கு இடையில் பாரசீகம் மற்றும் சிரியாவின் மலைகளில் வாழ்ந்தனர். அந்த நேரத்தில் இவர்கள் கட்டுக்கோப்பான சூழ்ச்சி கொள்கையை தங்களது அரசுக்கு எதிரிகள் என்று கருதப்பட்ட, ஆரம்பத்தில் முசுலிம் மற்றும் பிறகு கிறித்தவ தலைவர்களை ரகசியமாக கொன்றதன் மூலம் மத்திய கிழக்கு முழுவதும் பின்பற்றினர்.[1]
நவீன ஆங்கில வார்த்தையான அசாசினேசன் இந்த அசாசின்கள் பயன்படுத்திய தந்திரோபாயங்களை அடிப்படையாகக் கொண்டு உருவானதாகும். நிசாரி இசுமாயிலி மதம் பதினோராம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உருவானது. பாத்திமிட் கலீபகத்தின் அடுத்த ஆட்சியாளர் யார் என்ற குழப்பம் நிசாரி இபின் அல்-முசுதன்சிர் மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரர் அல்-முசுதாலி ஆகியோர் இடையே ஏற்பட்ட நேரத்தில் இது உருவானது.[2][3] இவர்களது காலத்தில் அரேபியர்களான இபின் அல்-கலனிசி மற்றும் அலி இபின் அல்-ஆதிர் மற்றும் பாரசீகரான அடா மாலிக்-சுவய்னி ஆகிய வரலாற்றாளர்கள் வாழ்ந்தனர். முதலிரண்டு வரலாற்றாளர்கள் அசாசின்களை படினியா என்று அழைத்தனர். இப்பெயரை இசுமாயிலிகள் கூட பரவலாக ஏற்றுக் கொண்டனர்.[4][5]
Remove ads
வீழ்ச்சி மற்றும் அதற்குப் பிறகு

அசாசின்கள் நன்றாகப் பதிவு செய்யப்பட்ட, மங்கோலியப் பேரரசின் குவாரசமியப் படையெடுப்பின்போது முற்றிலுமாக அழிக்கப்பட்டனர். மங்கோலிய தளபதி கித்புகாவிடம் ஒரு ஆணையானது கையில் வழங்கப்பட்டது. 1253 ஆம் ஆண்டு கித்புகா பல அசாசின் கோட்டைகளை தாக்க ஆரம்பித்தார். 1256 ஆம் ஆண்டு ஹுலாகு கான் அப்பகுதிக்கு முன்னேறினார். அவ்வருடத்தின் பிற்பகுதியில் அலமுத் கைப்பற்றப்பட்டது. லம்ப்சர் 1257 ஆம் ஆண்டு வீழ்ந்தது. 1260 ஆம் ஆண்டு மசையப் வீழ்ந்தது. அசாசின்கள் அலமுத்தை மீண்டும் கைப்பற்றி சில மாதங்களுக்கு தங்களது கட்டுப்பாட்டில் 1275 ஆம் ஆண்டு வைத்திருந்தனர். ஆனால் அவர்கள் ஒடுக்கப்பட்டு அவர்களது அரசியல் சக்தியானது மீண்டும் எழாத வண்ணம் அழிந்துபோனது. இந்த நிகழ்வுகளுக்கு சிறிது காலத்திற்குப் பின்னர் ருக்ன் அல்-தின் குர்ஷா மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டார்.[6]
சிரியாவில் அசாசின்கள் மற்ற முஸ்லிம் குழுக்களுடன் மங்கோலியர்களை எதிர்ப்பதற்காக இணைந்தனர். மம்லுக்குகள் மற்றும் பைபர்சுடன் இணைய முயற்சித்தனர். பைபர்ஸ் ஹாஸ்பிடலர்களுடன் 1266 ஆம் ஆண்டு இணைந்தார். அசாசின்களால் கொடுக்கப்பட்ட கப்பமானது நிறுத்தப்பட வேண்டுமென நிபந்தனை விதித்தார். ஒரு கட்டத்தில் பிராங்குகளுக்கு செலுத்தப்பட்ட கப்பமானது அங்கு செல்வதற்கு பதிலாக கெய்ரோவிற்கு வர ஆரம்பித்தது. பைபர்சின் சுயசரிதையை எழுதிய இபின் அப்த் அல்-ஜாகிர் 1260 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கூட இக்தாவில் இருந்த அசாசின்களின் நிலப்பகுதிகளை தனது தளபதிகளுக்கு பைபர்ஸ் வழங்கியதாக எழுதியுள்ளார். பைபர்ஸ் 1265 ஆம் ஆண்டு முதல் பல்வேறு இளவரசர்களிடமிருந்து அசாசின்கள் பெற்ற பரிசுகளுக்கு வரி விதிக்க ஆரம்பித்தார். பொதுவாக தெரிந்தவரை இப்பரிசுகள் பிரான்சின் ஒன்பதாம் லூயி, ஜெர்மனியின் முதலாம் ருடால்ப், காஸ்டிலேவின் பத்தாம் அல்போன்சோ மற்றும் ஏமனின் ரசூலிட் சுல்தான்[7] அல்-முசாபர் யூசுப் ஆகியோரிடமிருந்து வந்துள்ளன. தனது சுல்தானகத்திற்கு ஆபத்து வரலாம் என்று அறிந்த பைபர்ஸ் 1270 ஆம் ஆண்டு அசாசின்களின் சிரிய பிரிவை தன்னுடன் இணைத்துக்கொண்டார்.[6]
Remove ads
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads