சியா இசுலாம்

முகமது தனக்குப்பின் அலியை தலைவராக நியமித்தார் என்பதை அடிப்படையாகக் கொண்ட இசுலாமின் பிரிவு From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஷியா இஸ்லாம் (அரபு மொழி: شيعة, ஆங்கிலம்: Shi'a) இசுலாம் மதத்தின் முக்கியமான உட்பிரிவுகளுள் ஒன்று. இது இசுலாமிய மதப்பிரிவுகளுள் சுன்னி இஸ்லாத்துக்கு அடுத்தபடியாக அதிகமானோர் பின்பற்றும் பிரிவாகும். [1]ஷியா என்ற சொல் “அலியை பின்பற்றுவோர்” என்று பொருள்படும் அரபு மொழிச் சொல்லில் இருந்து தோன்றியது. ஷியாக்கள் முகமது நபியின் மருமகன்களில் ஒருவரான அலியே அவரின் உண்மையான வாரிசு என்று நம்புகிறார்கள்.[2]

இந்திய முஸ்லிம்களில் 90 சதவீதம் பேர் சன்னி முஸ்லிம்கள். பத்து சதவீதத்தினர் ஷியா முஸ்லிம்கள் ஆவர். சியா முசுலிம்கள் உலக முசுலிம் மக்கள்தொகையில் 10-20% உள்ளனர். மத்திய கிழக்கு நாடுகளின் மக்கள்தொகையில் இவர்கள் 38% ஆகும்.[3] ஷியா பிரிவினர் அதிகம் வாழும் முஸ்லிம் நாடு ஈரான் ஆகும். சன்னி, ஷியாக்களுக்கு இடையே பல நூறாண்டுகள் சண்டையும் சச்சரவும் இருந்து வருகிறது. ஷியாக்களின் ஆட்சி நடைபெறும் நாடுகள் ஈராக் மற்றும் இரான். இரானுக்கு அடுத்தபடியாக, இராக், லெபனான், பஹ்ரைன், கத்தார், பாகிஸ்தான், சிரியா, ஏமன், இந்தியா, வங்காள தேசம் நாடுகளில் ஷியாக்கள் உள்ளனர்.

Remove ads

சன்னி-சியா வேறுபாடுகள்

அல்லாஹ் ஒருவனே ஏக இறைவன், அவனால் அருளப்பட்டது குர்ஆன், அவனது இறுதித் தூதர் முஹம்மது நபி என்ற இஸ்லாத்தின் அடிப்படையை எல்லா பிரிவுகளும் ஏற்றுக் கொள்கின்றன. சன்னிகளும் ஷியாக்களும் அல்லாஹ் ஒருவனே; குர்ஆனும் ஒன்றே; இறுதித் தூதரும் ஒருவரே; மக்கா இறையில்லமும் (கஅபா) ஒன்றே.

முஹம்மது நபிக்குப் பிறகு, இஸ்லாமிய ஆட்சியாளராக (கலீபா) யாரை ஏற்பது என்பதில் வேறுபாடு ஏற்பட்டது. முஹம்மது நபியின் நெருங்கிய தோழரும் மாமனாருமான அபுபக்கரை, முதல் கலீபாவாக சன்னிகள் ஏற்கின்றனர். ஷியா பிரிவினரோ, முஹம்மது நபியின் மற்றொரு தோழரும் மருமகன்களில் ஒருவரான அலியே நபியின் வாரிசு என்கின்றனர். இதில் தொடங்கிய சர்ச்சை பல நூற்றாண்டுகளுக்கு நீடித்து வருகிறதுது.

அலீஅவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்றால் கூட்டத்தினர் என்று பொருள். அலீ க்கு ஆதரவான கூட்டம் என்பதால் "ஷீயத் அலீ - அலீயுடைய கூட்டத்தினர்' என்று அழைக்கப்பட்டனர்.

இவ்வாறு தோன்றிய ஷியாக்கள் காலப் போக்கில், அலீ அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். முகம்மது நபி, அலீ, அலீயின் மனைவி ஃபாத்திமா, மகன்கள் ஹஸன், ஹுசைன் ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர்.

அலீ அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் அவர் சிறு வயதினராக இருந்ததால் முகம்மது நபி அவர்களிடம் வழங்கப்பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.[4]

சுன்னி இஸ்லாத்தின் தொழுகைக்கான அழைப்பி (பாங்கு): "அல்லாஹு அக்பர்' என்று தொடங்கும் பாங்கின் பொருள், "இறைவன் மிகப் பெரியவன்! வணக்கத்துக்குரியவன் இறைவனைத் தவிர வேறெவரும் இல்லை. முஹம்மது இறைவனின் தூதர். தொழ வாருங்கள். வெற்றி பெற வாருங்கள்' என்பது. இதில், ஷியாக்கள் மேலும் ஒரு வரியைச் சேர்த்துக் கொள்கிறார்கள். "முஹம்மது நபி அல்லாஹ்வின் இறுதித் தூதர்; அவரது வாரிசு அலி' என்பதே அவ்வாசகம். ஐந்து வேளைத் தொழுகையை, மூன்று வேளைகளில் (இரண்டை ஒரே வேளையில்) தொழுது விடுகின்றனர் ஷியாக்கள். தொழுகையில், ஸஜ்தா எனும் சிரம் பணியும் நிலையில், "காகே ஷிபா' எனப்படும் புனித கர்பலாவின் மண்ணால் செய்யப்பட்ட "சில்' (ஓடு) ஒன்றை வைக்கிறார்கள். சன்னிகள் இவ்வாறு செய்வதில்லை. ஷிஆ பிரிவு 12 இமாமகளை பின்பற்றுகிறது.

Remove ads

பன்னிரண்டு இமாம்கள்

அலி

அலீ முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகனும், முகம்மது நபியின் மருமகனுமான அலீ அவர்கள் நான்காவது கலீபாவாகப் பதவி வகித்தார். அலி ராசித்தீன் கலீபாக்களில் நான்காவது மற்றும் இறுதி கலீபா ஆவார். இவர் கிபி 656 முதல் கிபி 661 வரை ஆட்சி செய்தார். கிபி 661-ம் ஆண்டு இவர் படுகொலை செய்யப்பட்டார்.

ஹஸன்

அலீயின் மூத்த மகனும் முகம்மது நபியின் பேரனும் ஆவார்.

ஹுஸைன்

அலீயின் இளைய மகனும் முகம்மது நபியின் பேரனும் ஆவார்.

ஸஜ்ஜாத்

ஹுஸைனின் மகனாவார்.

முஹம்மத் பாக்கிர்

ஹுஸைனின் மகனாவார்.

ஜஃபர் ஸாதிக்

முஹம்மத் பாக்கிரின் மகனாவார். சிறந்த சட்ட மேதை. சுன்னா பிரிவாலும் போற்றபடுபவர்.

மூஸா அல் காழிம்

ஜஃபர் ஸாதிக்கின் மகனாவார். கும்ஸ் எனும் ஜகாத் பொருட்களை வசூலிக்க நடைமுறையை உருவாக்கியவர்.

றிழா

மூஸா அல் காழிமின் மகனாவார். கலீபா மாமுன் ரஷீதால் இளவரசராக நியமிக்கப்பட்டவர்.

ஜவாத்

றிழாவின் மகனாவார்.அப்பாசிய கலீஃபாவின் துன்புறுத்தலுக்கு ஆளானவர். பெருந்தன்மை மற்றும் பக்திக்கு புகழ்பெற்றவர்.

ஹாதி

ஜவாத்தின் மகனாவார் இவர் கலீஃபா அல் முத்தாஸ்ஸின் ஆணையின்படி விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.

ஹஸன் அல் அஸ்கரீ

தந்தை ஹாதியின் மரணத்திற்கு பிறகு தனது வாழ்நாளில் பெரும்பகுதி கலீபாவால் இவருக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. பின்னர் இவரும் கலீஃபா அல் முத்தமீதுவின் ஆணையின்படி விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார்.

மஹ்தி

இறுதி இமாம் மற்றும் வாக்குறுதியளிக்கப்பட்ட மஹ்தி என்பவர் ஆவார். இவர் மீண்டும் இஸ்லாம் சரியான ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்தி, பூமியை நீதி மற்றும் சமாதானத்துடன் வழங்குவார். என நம்பப்படுகிறது.

Remove ads

ஜகாத்

தமது வருவாயில் இரண்டரை சதவீதத்தை ஜகாத் (ஏழை வரி அல்லது கொடை) தர வேண்டும் என்பது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் விதிக்கப்பட்ட கடமை. பணக்காரர்களின் செல்வத்தில் ஏழைகளுக்கு உரிய பங்கு இது. ஷியா முஸ்லிம்கள், இந்த இரண்டரை சதவீத ஜக்காத்துடன், மொத்த ஆண்டு சேமிப்பில் 20 சதவீதத்தை கும்ஸ் ஆகத் தர வேண்டும்.

மொகரம்

சன்னி, ஷியா முஸ்லிம்களை வேறுபடுத்திக் காட்டும் நிகழ்வு மொகரம் ஆகும். ஷியாக்கள், மொஹரத்தைத் துக்க அனுஷ்டிப்பாக முக்கியத்துவம் தந்து கடைபிடிக்கிறார்கள். சென்னையில் மொஹரம் நாளில் மார்பில் கைகளால் ஓங்கி அடித்தபடி, தங்களை வருத்திக் கொண்டு ஊர்வலம் செல்வதைப் பலரும் பார்க்கலாம்.

பல்வேறு நாடுகளில் ஷிஆ மக்கள் தொகை பட்டியல்

2009 அக்டோபரில் வெளியான உலகளாவிய முஸ்லிம் மக்கள் தொகை அறிக்கை அடிப்படையில்

மேலதிகத் தகவல்கள் நாடு, ஷிஆ முஸ்லிம் மக்கள் தொகை ...
Thumb
Proportion of the world total of Shia Muslim adherents by continents displayed as a pie diagram:
      America0.6 %
      Europe4.4 %
      Africa0.8 %
      Asia94 %
Remove ads

பண்டிகைகள்

  • நோன்புப் பெருநாள்
  • ஹஜ்ஜு பெருநாள்
  • ஈதுல் ஙதீர் துல் ஹஜ் மாதம் 18 - முகம்மது நபி அலி அவர்களை சிறப்பித்து கூறியது.[22]
  • ஆஷூரா நாள் முஹரம் 10 ஹூஸைன் குழுவினர் வீரமரணம் அடைந்த நாள்
  • அர்பாய்ன் ஹுசைன் குடும்பத்தின் பெண்கள் மற்றும் குழந்தைகளின் துன்பத்தை நினைவூட்டுகிறது. ஹுசைன் கொல்லப்பட்டபின், அவர்கள் கர்பாலா (மத்திய ஈராக்), சிரியாவில் உள்ள

டமாஸ்கஸ் வனாந்தரத்தில் அணிவகுத்துச் சென்றனர். பல குழந்தைகள் (இவர்களில் சிலர் முஹம்மதுவின் நேரடி சந்ததியினர்) வழியில் தாகம் மற்றும் வெளிப்பாடு காரணமாக இறந்தனர். அஷூராவுக்கு 40 நாட்களுக்கு பிறகு, சபர் மாதம் 20 ஆம் தேதி அர்பாய்ன் ஏற்படுகிறது

  • மவ்லிது முஹம்மது - முஹம்மது நபியின பிறந்த நாள் ரபியுல் அவ்வல் பிறை 17
  • பாத்திமா பிறந்த நாள்-ஜமாத்துல் ஆகிர் 20.
  • மிட் ஷாபான் - 12 வது மற்றும் இறுதிப் பன்னிரெண்டு இமாம், முஹம்மத் அல்-மஹ்தி பிறந்த தேதி. ஷாபானின் 15 ஆம் தேதி ஷியா முஸ்லிம்கள் கொண்டாடப்படுகிறது.
  • லைலத்துல் கத்ர் இரவு- புனித குர்ஆன் இறங்கிய இரவு
  • ஈத் அல்-முபாஹலா- கிறிஸ்தவ பிரதிநிதிகளுடன் நடந்த விவாத வெற்றி. துல்ஹஜ் 24 ம் தேதி நடைபெறுகிறது.
Remove ads

இந்தியாவில்

இந்தியாவில் ஷியாக்கள் எண்ணிக்கை குறைவு. உத்தரப் பிரதேசம், காஷ்மீரில், ஆந்திரம், தமிழகத்தில் எனப் பிரிந்துள்ளனர்..

தமிழகத்தில் ஷியாக்களின் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரம். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஆயிரம்விளக்கு மசூதிதான் இதன் தலைமையகம். தமிழக அரசின் தலைமை ஷியா காஜி ஜி.ஏ. அஸ்கரியின் அலுவலகம் இங்குதான் உள்ளது. சென்னையில் 10 மசூதிகள், வேலூர் தொரப்பாடி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, ஜெகதேவி, வந்தவாசி என சொற்பமான இடங்களில்தான் வாழ்கின்றனர். இவர்களது தாய்மொழி உருதுஆகும். தமிழ் அதிகமாக தெரியாது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads