அமுக்கிரா
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அமுக்கிரா, அமுக்கரா, அமுக்கிரி அல்லது அசுவகந்தி (ⓘ) (Withania somnifera) மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். இதன் வேரும் இலையுமே மருத்துவப் பயனுள்ளவை.

Remove ads
பெயர்கள்
அமுக்கிராவுக்கு அசுவகந்தி அமுக்குரவி, அமுக்கிரி, அசுவம், அசுவகந்தம், இருளிச்செவி, வராககர்ணி, கிடிச்செவி ஆகிய வேறு பெயர்கள் உண்டு. ‘கந்தம்’ என்றால் கிழங்கு என்பதாக அசுவ‘கந்தம்’ என்றழைக்கப்படுகிறது. அசுவம் என்றால் வடமொழியில் குதிரை என்பது பொருள். குதிரை பலத்தை வழங்கும் என்பதால் அசுவகந்தா என்ற பெயரைப் பெற்றதாக கூறப்படுகிறது.[1] இதன் இலையை முகர்ந்தால் குதிரை நாற்றம் அடிப்பதால் அசுவகந்தா அல்லது அசுவகந்தா என்று வடமொழியில் அழைக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இதன் இலையை அரைத்து கட்டிகளின் மேலே பூசினால் கட்டிகளை அமுக்கிவிடும் அதனால் இதனை தமிழில் அமுக்கிரா என்று அழைக்கிறார்கள்.
Remove ads
விளக்கம்
150 - 170 சென்ட்டி மீட்டர் உயரமாக வளர்கிறது. இதன் இலைகள் முட்டை வடிவம் கொண்டவை. இதன் இலைகளின் மேற்பரப்பில் மெல்லிய ரோம வளரிகள் காணப்படும். இச்செடியானது சிவப்பு நிறம் கொண்ட சிறிய அளவிலான காய்களைக் கொண்டிருக்கும்.
குறிப்புகளும் மேற்கோள்களும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads