அடாணா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அடாணா அல்லது அடானா (Adana) என்பது கர்நாடக இசையில் ஒரு ஜன்னிய இராகம் ஆகும். இது 29ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப்படும் 5ஆவது சக்கரத்தின் 5ஆவது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்னிய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இராகம்.
இலக்கணம்
ஆரோகணம்: | ஸ ரி2 ம1 ப நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 தா2 ப ம1 ப கா2 ரி2 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- இவ்விராகம் ஔடவ - வக்ர சம்பூர்ண இராகம் ஆகும்.
இதர அம்சங்கள்
- ஆரோகணத்தில் க , த வர்ஜம். இது பாஷாங்க இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் சாதாரண காந்தாரமும், கைசிகி நிஷாதமும் அன்னிய ஸ்வரங்கள்.
- திரிஸ்ருதி தைவதமும், சதுஸ்ருதி தைவதமும் இந்த இராகத்தில் நன்கு பயன்படுத்தப்படுகின்றன..
- சஞ்சாரங்கள் பெரும்பாலும் மத்தியஸ்தாயியின் உத்தராங்கத்தையும், தாரஸ்தாயியின் பூர்வாங்கத்தையும் தழுவி நிற்கும்.
- வீரச்சுவை நிரம்பிய இராகம். அ _ டாணா : பிறப்பு, இறப்பு ஆகிய கட்டுக்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் பெற்ற இராகம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
- சென்ற நூற்றாண்டில் அடாணா அப்பய்யர் இந்த இராகத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கினார்.
- திருஞானசம்பந்தர் பாடிய "யாழ்முறிப்பண்" அடாணா இராகம் எனக் கருதப் படுகின்றது.
- புரந்தரதாசர் இயற்றிய முதல் பாட்டு "மோஸஹோதெனல்லோ" என்று தொடங்கும் அடாணா இராகப் பாட்டு; தியாகராஜர் இராமதரிசனம் பெற்ற பொழுது பாடியது "ஏல நீ தயராது" என்ற அடாணா பாடல்.
- முதற்காலத்தில், கதாகாலட்சேபங்களில் தூங்குவோரை எழுப்புவதற்குப் பாகவதர்கள் அடாணா இராகத்தில், மத்திம காலத்தில் ஒரு தில்லானாவையோ வேறொரு பாட்டையோ பாடுவது வழக்கம்.
Remove ads
உருப்படிகள்[1]
அடாணா இராகத்தில் அமைந்த திரையிசைப் பாடல்கள்
- யார் தருவார் இந்த அரியாசனம் :- மகாகவி காளிதாஸ்
- பால கனகமய :- சலங்கை ஒலி
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads