அட்டமாசித்தி உபதேசித்த படலம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads


அட்டமாசித்தி உபதேசித்த படலம் என்பது சைவ சமய நூலான திருவிளையாடல் புராணத்தின் 33ஆம் படலமாகும் இது கூடல் காண்டத்தில் இடம்பெற்றுள்ளது இதில் 1760 முதல் 1788 வரை பாடல்கள் உள்ளன [1]

Remove ads

கதை

கயிலாயத்தில் நந்தி முதலிய சிவகணங்கள் சூழ சனகர் முதலிய முனிவர்கள் சிவகதை சொல்லிக் கொண்டிருக்க சிவனுக்கு உமையம்மை வெற்றிலை மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள் அப்போது அங்கு வந்த கார்த்திகைப் பெண்கள் இறைவனை வணங்கி தங்களுக்கு அட்டமா சித்திகளை உபதேசிக்க வேண்டினர் [2]

இறைவனின் சாபம்

கார்த்திகைப் பெண்களிடம் இறைவன் உமையம்மையைச் சுட்டிக்காட்டி அட்டாமாசித்திகள் உமையம்மைக்கு குற்றேவல் செய்வோராக உள்ளனர், உமையம்மையே உலகின் எங்கும் நிறைந்தவளாக உள்ளார் எனவே தாங்கள் அவரை சிந்தித்தால் அட்டமாசித்தகளை பெறலாம் என்றும் கூறினார், கார்த்திகைப் பெண்கள் இறைவன் கூறியதை மறந்து அவரை மதிக்காது சென்றனர் இதனால் கோபமடைந்த இறைவன் நீங்கள் பட்டமங்கை என்னும் ஊரிலுள்ள ஆலமரத்தடியில் ஆயிரம் தேவ ஆண்டுகளுக்கு கல்லாக கிடப்பீர் என சபித்தார், கார்த்திகைப் பெண்கள் இச்சாபத்திலிருந்து விடுபட கேட்க, தான் அங்கு வந்து தங்களை சாபத்திலிருந்து விடுவித்து அட்டமா சித்திகளை உபதேசிப்பேன் என கூறினார் [2]

ஆசிரியரான இறைவன்

பெற்ற சாபத்தினால் கார்த்திகைப் பெண்கள் தங்கள் அழகையும் ஆபரணங்களையும் இழந்து கல்லாய் உருமாறினர், ஆலமரத்தின் பழங்கள் விழுந்து அக்கற்களை மூடின அவர்களுக்கு விடுதலை தர எண்ணிய இறைவன் அங்கு தோன்றி அவர்களுக்கு சாபத்திலிருந்து விடுதலை தந்தார் பின், ஆசிரியராக மாறி அட்டமா சித்திகளை விளக்கினார் மேலும் இறைவனை அறிந்த யோகிகள் இந்த சித்திகளை அறிவார்கள் ஆனால் பயன்படுத்த மாட்டார்கள் என்றும் நினைத்ததை அடைய செய்யும் இவற்றை விட பெரிய மனநிலையையே அடைய விரும்புவர் என்றும் கூறினார் பின் கார்த்திகைப் பெண்கள் விண்வழியாக தங்களின் இருப்பிடத்தை சென்றடைந்தனர் [2]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads