அணு நிறை அலகு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அணு நிறை அலகு (Atomic mass unit) என்பது அணு அல்லது மூலக்கூறின் நிறையை குறிப்பிட பயன்படும் ஓர் அலகாகும்.[1][2] பொதுவாக, நிறையானது கிலோ கிராம் என்ற அலகால் அளக்கப்படுகிறது. ஒரு அணு நிறை அலகானது, தோராயமாக ஒரு அணுக்கருனி நிறையின் அளவாகும். இதன் மதிப்பு தோராயமாக ஒரு கிலோ கிராம் / மோல் மதிப்பாகும்.
ஒரு அணு நிறை அலகு[3] என்பது கரிமம் 6C12 அணுவின் நிறையில் (1/12) பங்கிற்குச் சமம். அணு எண் 6 மற்றும் நிறை எண் 12 காெண்ட கரிமத்தின் நிறை 12 amu க்குச் சமம். ஒரு அணு நிறை அலகு என்பது 1.660539040(20)×10−27 kg சமம். 1961 வரை மூச்சியம் நிறையில் /16 என்ற அடிப்படையில் அணு நிறை அலகு கணக்கிடப்பட்டது. இப்போது கார்பன்-12 என்ற சமவிடத்தானின் (1/12) நிறை அளவில் அணு நிறை அலகு கணக்கிடப்படுகிறது.
Remove ads
வரலாறு
1803 இல் அறிவியல் அறிஞர் யோவான் தாற்றன் முதன்முதலில் சார்பு அணு நிறை (Relativistic Atomic Mass) என்ற கோட்பாட்டை நீரியம் H1 என்ற அணுவை அலகாகக் கொண்டு உருவாக்கினார். 1903 இல் வில்லெம் ஆசுவால்டு என்ற அறிவியல் அறிஞர் சார்பு அணு நிறை என்ற கோட்பாட்டை O-16 அணுவின் 1/16 என்ற அளவை அடிப்படை அலகாக கொண்டு உருவாக்கினார். 1961 முதல், கரிமம்-12 என்ற சமவிடத்தான் அணு நிறை அலகின் அடிப்படை அலகாகப் பயன்படுத்தப்படுகிறது.
- 1 amu = 1/12 கரிமம்-12 அணு நிறை
மேலே குறிப்பிட்ட H1 அணுவும், O-16 அணுவும், amu அளவில், ஒன்று என்ற அளவில் இல்லாமல் பதின்ம அளவில் ஒன்றைவிட அதிகமானதால், அவை கைவிடப்பட்டன.
Remove ads
அனைத்துலக முறை (அமு, SI) அலகில் அணு நிறை அலகு amu ஒப்பீடு
CGPM எனும் எடை மற்றும் அளவுகளுக்கான பொது மாநாடு 1971-ல் மோல் என்பதை அடிப்படை அலகாக ஏற்றுக் கொண்டது. 0.012 கிலோ கிராம் கரிமம்-12 அணுவிலுள்ள அணுக்களின் எண்ணிக்கை ஒரு மோல் ஆகும். ஒரு பொருளில் 6.022140857(74)×1023 மோல்−1 [4] என்ற எண்ணிக்கையிலான அணுக்கள் இருக்கின்றன. இந்த எண் அவகாடிரோ எண் எனப்படுகிறது.
அவகாடிரோ எண் X அணு நிறை அலகு = 0.001 கிலோ கிராம் / மோல்[5]
பயன்பாடு
புரதங்களின் பயன்பாடு அணு நிறை அலகில் அளக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டு
H1 அணுவின் நிறை 1.0078250 amu
C12 அணுவின் நிறை 12 amu
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads