கிலோகிராம்

From Wikipedia, the free encyclopedia

கிலோகிராம்
Remove ads

கிலோகிராம் (குறுக்கம்: கிகி) என்பது சீர்தரம் செய்யப்பட்ட அனைத்துலக முறை அலகுகளில் உள்ள அடிப்படையான நிறை அலகு.[2]

விரைவான உண்மைகள் கிலோகிராம், பொது தகவல் ...
Thumb
இங்கே காட்டப்பட்டுள்ளது “அனைத்துலக முதலுருக் கிலோகிராம்” (International Prototype Kilogram (“IPK”)) எனப்படும் முதன்மையான ஒப்பீட்டு நிறையின் கணினி ஒளிப்ப்படம். இந்த முதன்மை கிலோகிராம் பிளாட்டினம்-இரிடியம் மாழைகளால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் உள்ள செவ்ரே என்னும் இடத்தில் துல்லியமாக வெப்பநிலை, சூழ் அழுத்தம் கட்டுப்படுத்தப்பட்ட மிகவும் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் BIPM (Bureau International des Poids et Mesures, புயுரோ இன் டர்னாசியொனால் டெ புவவ எ மெசூர்) என்னும் சீர் எடைகளுக்கும் அளவைகளுக்குமான அனைத்துலக அலுவலகம் ஆகும்.

ஒரு கிலோகிராம் நிறை என்பது பிளாட்டினம்-இரிடியம் கலவையால் செய்யப்பட்டு பிரான்ஸ் நாட்டில் செவ்ரே என்ற இடத்தில் மிகவும் பாதுகாப்பாக சீரான வெப்ப அழுத்த நிலைகளில் வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளின் நிறை ஆகும். இப்பொருளை Le Grand K (லெ ‘கிரான்) என்று பிரெஞ்சு மொழியிலும், IPK அல்லது International Prototype Kilogram (அனைத்துலக முதலுருக் கிலோகிராம் என்று பொருள்படும் இன்ட்டர்நேசனல் புரோட்டோ டைப் கிலோகிராம்) என்று ஆங்கிலத்திலும் அழைக்கிறார்கள்.

ஒரு கிலோகிராம் என்பது சற்றேறக்குறைய ஒரு லிட்டர் நீரின் நிறையை ஒத்தது. உலகில் உள்ள நிறைகள் எல்லாமும் ஒப்பீடு செய்யும் முதன்மை சீர்தர அளவு இந்த கிலோகிராம் என்பது. அடிப்படையான அனைத்துலக முறை அலகுகளில் இது ஒன்றுதான் கிலோ போன்ற முன்னொட்டு கொண்ட அலகு. அதே போல இது ஓர் அலகு மட்டுமே இயற்கையான இயற்பியல் அடிப்படை நிகழ்வு அல்லாமல், ஒரு குறிப்பிட்ட புறப்பொருளின் அடிப்படையில் அமைந்த அலகு.

அன்றாட வாழ்வில் ஒரு கிலோகிராம் என்பது ஒரு நிறை என்றாலும், புவியின் ஈர்ப்பால் ஏற்படும் ஒருகிலோகிராம் எடையோடு நினைத்துப் புழங்குவது வழக்கம். ஆனால் நிறை (இலங்கையில் திணிவு) என்பது உண்மையில் எடை அல்ல. எடை என்பது ஒரு பொருளின் நிறை மீது செலுத்தும் புவி ஈர்ப்பு விசை ஆகும். இந்த விசையை நியூட்டன் என்னும் அலகால் அளப்பர். எனவே நிறை அல்லது திணிவு என்பது பொருளின் இயல் தன்மை, பொருண்மைத்தன்மை.

ஒரு பொருளின் நிறை என்பது அப்பொருள் மீது எந்த விசையைச் செலுத்தினாலும், அந்த விசையினால் அப்பொருள் கொள்ளும் முடுக்கத்தின் அளவை தீர்மானம் செய்யும் இயல்தன்மை எனலாம். ஒரு கிலோகிராம் நிறை மீது ஒரு நியூட்டன் விசையைச் செலுத்தினால், ஒரு மீ/நொ2 முடுக்கம் கொள்ளும்.

Remove ads

சொல்லினக்கணம் மற்றும் பயன்பாடு

கிலோகிராம் (kilogramme or kilogram) எனும் சொல் பிரான்சிய மொழியிலிருந்து கொண்டுவரப்பட்ட சொல்லாகும் (பிரான்சிய சொல் kilogramme). இது பிரான்சு மொழிக்கு கிரேக்கத்திலிருந்து வந்தது. ஆயிரம் எனும் கருத்தைத் தரக்கூடிய "χίλιοι" (சிளியோய், ஆங்கிலம் chilioi) எனும் சொல்லும், ஒரு சிறியளவு நிறை எனும் கருத்தைத் தரக்கூடிய "γράμμα" (கிரம்மா, ஆங்கிலம் gramma) இணைந்ததால் பெறப்பட்ட சொல்லாகும்.[3]கிலோகிராம் (kilogramme) எனும் சொல் பிரான்சிய சட்டத்தில் 1795 ஆம் ஆண்டு சேர்க்கப்பட்டது.[4] பிரான்சிய மொழியில் கிலோகிராம் எனும் சொல் எவ்வாறு உச்சரிக்கப்பட்டதோ அவ்வாறே ஐக்கிய அரபு இராச்சியத்திலும் 1797ஆம் ஆண்டு ஆங்கிலத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்ட போதும் உச்சரிக்கப்பட்டது.[5] ஐக்கிய அரபு இராச்சியத்தில் உச்சரிக்கப்பைடவாறே அமெரிக்காவிலும் அச்சொல் உச்சரிக்கப்பட்டது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் கிலோகிராம் என்றும் கிலோக்ராமே என்றும் உச்சரிக்கப்பட்டது, ஆனாலும் கிலோகிராம் என உச்சரிப்பது அதிகமாக வழக்கத்தில் இருந்து வந்தது.[6] கிலோகிராம் எனும் உச்சரிப்பு தற்போது அதிக சர்வதேச அமைப்புக்களால் அங்கீகரிக்கப்பட்ட உச்சரிப்பு முறையாகும். 19 ஆம் நூற்றாண்டில் பிரான்சிய சொல்லான கிலோ (kilo), எனும் கிலோகிராமே (kilogramme) எனும் சொல்லின் குறு எழுத்துமுறை ஆங்கில மொழிக்குள் கொண்டுவரப்பட்டது.கிலோ எனும் சொல்லும் கிலோகிராம் எனும் ஒரே பொருளையே தருகிறது.[7] அமெரிக்காவின் காங்கிரஸ் மெட்ரிக் முறையை 1866 அறிமுகப்படுத்திய போது அந்தக்காங்கிரஸ் கிலோ எனும் சொல்லை கிலோகிராமின் மாற்றுப்பெயராக பயன்படுத்த அனுமதி அளித்தது,[8] ஆனால் 1990 ஆம் ஆண்டு கிலோ என்னும் சொல் பயன்பாடு பற்றிய கருத்தை மீளப்பெற்றது.[9]

Remove ads

அனைத்துலக முதலுருக் கிலோகிராம்

1889 ஆம் ஆண்டு முதல் பொருளின் நிறையை கிலோகிராம் பெருமமாக அழைப்பது சர்வதேச முதலுருக் கிலோகிராம் என வரையறுக்கப்பட்டுள்ளது. இதனை தொழிற்முறை எடை அளவுகள் ஆய்வியலில் "IPK" (international prototype kilogram) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சர்வதேச முதலுருக் கிலோகிராமானது "Pt‑10Ir" என்றழைக்கப்படும் பிளாட்டினம் உலோகக் கலவையால் ஆனது. இக்கலவையில் 90% "பிளாட்டினம் மற்றும் 10% இரிடியம் உள்ளது. இக்கலவை செவ்வட்டவுருளையாக மாற்றப்பட்டு (உயரம்=விட்டம்) மேற்பரப்பு பகுதி 39 மி.மீட்டர் குறைக்கப்படுகிறது.10% இரிடியம் கூடுதலாக சேர்க்கப்படுவதால் பிளாட்டினத்தின் பண்பு மேம்படுத்தப்பட்டு அதன் கடின மற்றும் உறுதித்தன்மை தக்க வைத்துக்கொள்ளப்படுவதுடன் கீழ்கண்ட நற்பண்புகளையும் பெற்றிருக்கின்றன.

அனைத்துலக முன்மாதிரிக் கிலோகிராம் நகல்கள்

Thumb
தேசிய முன்மாதிரிக் கிலோகிராமின் K20, அமெரிக்காவில் பாதுகாக்கப்படும் இரண்டு நகல்களில் இது ஒன்றாகும்.மேரிலான்ட்டின் கெயிதர்சுபெர்க்கு எனுமிடத்தில் உள்ள தேசிய தரநிர்னய மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் National Institute of Standards and Technology இரண்டு கண்ணாடி மணிச்சாடிக்குள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது

அனைத்துலக முன்மாதிரிக் கிலோகிராமின் பல்வேறு நகல்கள் கீழ்கண்டவாறு உலகின் பல்வேறு நாடுகளில் பாதுகாக்கப்படுகின்றன.

Remove ads

குறிப்புகள்

கிலோ ஆனது ஐக்கிய நாடுகள் பயன்படுத்தும் ஒலியியல் அகரத்தில் K ஐக் குறிப்பிடுகின்றது.

கிலோ அனைத்துலக முறையலகுகளில் முறையில் 103 அல்லது 1000 ஐக் குறிப்பிடுகின்றது. எடுத்துக் காட்டாக

  • 1000 கிராம், ஒரு கிலோகிராம்
  • 1000 மீட்டர், ஒரு கிலோமீட்டர்
  • 1000 வாட்டு, ஒரு கிலோவாட்டு
  • 1000 ஜூல் (சூல்), ஒரு கிலோஜூல் (ஒரு கிலோ சூல்).

1795 இல் முறையாகப் பயன்பாட்டுக்கு வந்தது (இதற்கு முன்னரும் பாவனையில் இருந்தது). இது கிரேக்க மொழியில் ஆயிரத்தைக் குறிக்கும் χίλιοι ("khilioi") என்னும் சொல்லில் இருந்து வந்ததாகும்.

கணினியில் இதன் பயன்பாடு

கணினியில் கிலோபைட் ஆனது 210 அல்லது 1024 பைட்டைக் குறிக்கும். இதனால் 1000 இருந்து வேறுபடுத்த பலரும் சிறிய k இற்குப் பதிலாகக் K ஐப் பொதுவாகப் பாவிக்கின்ற போதிலும் எல்லாரும் இந்நடைமுறையைப் பின்பற்றுவதில்லை.

ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்கள் பெரும்பாலும் 1000 பைட்களை ஒரு கிலோபைட் என்றே எடுத்துக் கொள்கின்றனr எனினும் விண்டோஸ் 1024 பைட்டையே 1 கிலோபைட்டை என எடுத்துக் கொள்வதால் ஹாட்டிஸ்க் தயாரிப்பாளர்களின் கூறும் கொள்ளவானது பிழையாகக் கூடுதல் இட வசதியிருப்பதாகக் பிழையான விளக்கத்தை ஏற்படுத்தலாம். ஏனெனில் கிலோபைட்டை 1000 ஆகவோ அல்லது 1024 ஆகவோ கருதினால் வழுவீதம் 2.4% வீதமே இதுவே பின்னர் ரேராபைட்டாகும் போது 10% ஆகின்றது.

Remove ads

SI பெருக்கங்கள்

மேலதிகத் தகவல்கள் Submultiples, Multiples ...
Remove ads

வெளி இணைப்புகள்

Remove ads

குறிப்புகள்

  1. Nos. 42′, 77 and 650 are called "standards" rather than "prototypes" because they are slightly underweight, slightly too much material having been removed when they were manufactured. Other than being more than 1 mg below the nominal 1 kg mass, they are identical to the prototypes, and are used during routine calibration work.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads