அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் (AEL) அகமதாபாத் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பன்னாட்டு நிறுவனமாகும். பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட இந்த நிறுவனம் அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான விளங்குகிறது. இதன் துணை நிறுவனங்கள் மூலம் விமான நிலைய செயல்பாடுகள், சமையல் எண்ணெய்கள், சாலை, ரயில் மற்றும் நீர் உள்கட்டமைப்பு, தரவு மையங்கள் மற்றும் சூரிய ஒளி உற்பத்தி போன்ற பல துறைகளில் தொழில் செய்கிறது.
| இந்த article சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். (ஏற்கெனவே உள்ள பிறமொழி விக்கிப்பீடியா விக்கித்தரவுடன் இணையுங்கள்) |
அதானி போர்ட்ஸ் & ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட், அதானி பவர் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் ஆகியவை 2015 முதல் மற்றும் அதானி பசுமை ஆற்றல் மற்றும் அதானி எரிவாயு ஆகியவை 2018 முதல் அதானி எண்டர்பிரைசஸிலிருந்து பிரிக்கப்பட்டு தனி நிறுவனங்களாக செயல்பட துவங்கின.
2023 ஜனவரியில் ஹிண்டன்பர்க் ரிசர்ச் என்னும் அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம் மீது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. அந்த அறிக்கை வெளியானதும் நிறுவனத்தின் பங்குகள் கடும் சரிவை சந்தித்தன.[1][2]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads