அதிகார நந்தி வாகனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதிகார நந்தி வாகனம் என்பது திருவிழாக்களின் பொழுது உற்சவ சிவபெருமான் எழுந்தருளும் வாகனங்களில் ஒன்றாகும். அதிகார நந்தி என்பவர் கயிலாயத்தின் வாயில் காவலன் ஆவார்.[1] இவர் சாரூப்ய நிலை எனப்படும் நிலையில் உள்ளார். இவருக்கு சிவபெருமானைப் போன்றே மூன்று கண்களும், நான்கு கைகளும், கையில் மானும் மழுவும் ஏந்திய நிலையில் இருக்கிறார். இவரே யார் சிவபெருமானை தரிசனம் செய்ய ஏற்றவர் என்று அறிந்து அனுமதி தருபவர் ஆவார். அதிகார நந்தி வாகன அமைப்புஅதிகார நந்தி வாகனமானது நான்கு கைகளுடன் முன்னிரு கைகளை முன்புறமாக ஏந்தியபடியும் பின்னிரு கைகளில் உடுக்கை, திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியபடி ஒரு காலை முட்டியிட்டு மறுகாலை முன்புரமாக பதித்த நிலையில் உள்ளது. வாகனம் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. அதன்மீது உலோகத்தகடுகள் போர்த்தப்பட்டுள்ளன. அதிகார நந்தி வாகனம் மரத்தினால் செய்யப்படுகிறது. இதன் தொன்மையைக் காக்க பித்தளையாலும், வெள்ளியாலும், தங்கத்தாலும் காப்புகள் செய்யப்பட்டு போடப்படுகின்றன. கோயில்களில் உற்சவ நாட்கள்
இவற்றையும் காண்கஆதாரங்கள்வெளி இணைப்புகள் |
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads