அதிராஜேந்திர சோழன்
சோழ மன்னர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவான். தந்தை இருந்த காலத்திலேயே இவனுக்கு இளவரசுப் பட்டம் கட்டப்பட்டது. பொ.ஊ. 1070 ஆம் ஆண்டில் வீரராஜேந்திரன் இறக்கவே, அதிராஜேந்திரன் சோழநாட்டுக்கு அரசன் ஆனான். இவனுடைய ஆட்சி மிகவும் குறுகியது. பதவியேற்ற அதே ஆண்டிலேயே, சில மாதங்களில் அவன் இறக்க நேரிட்டது.[1][2]
இவனது இறப்புப் பற்றிப் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. வைணவ நூலொன்று இவன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூறினும். அதிராஜேந்திரன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது. அக்காலத்தில் வைணவர்களுக்கும், சைவர்களுக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்ததாகத் தெரிகிறது.[சான்று தேவை] வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும், இதன் காரணமாகக் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது.[சான்று தேவை] அதிராஜேந்திரனின் இறப்புக்கும் இதற்கும் தொடர்பு இருப்பதாகச் சில ஆய்வாளர்கள்[யார்?][யார்?] ஐயம் வெளியிட்டுள்ளார்கள்.
வாரிசு எவரும் இன்றி அதிராஜேந்திரன் இறந்தது, சோழ அரசமரபில் முக்கியமான மாற்றத்துக்குக் காரணமானது. அதுவரை, விஜயாலய சோழனின் நேரடி ஆண் வழியினரால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு,முதலாம் இராஜேந்திரனின் மகள் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் கீழ் வந்தது. இவனே முதலாம் குலோத்துங்கன் எனப்பட்டவன்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads