கங்கைகொண்ட சோழபுரம்
தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கிராமம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
]கங்கைகொண்ட சோழபுரம் (ஆங்கிலம்: Gangaikonda Cholapuram) என்ற சிற்றூர் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்திலுள்ளது. இவ்வூரைச் சோழர்களின் பேரரசை நிறுவிய முதலாம் இராஜராஜ சோழனின் மகனான இராசேந்திர சோழன் உருவாக்கினார். இதனையடுத்த 250 ஆண்டுகளுக்கு இவ்வூர் பிற்கால சோழ பேரரசின் தலைநகரமாக விளங்கியது.[1] இங்கு இராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் உள்ளது.[2] அதனை ஐக்கிய நாடுகள் அமைப்பு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது.[3]
Remove ads
அமைவிடம்
கங்கைகொண்ட சோழபுரம் அரியலூர் மாவட்டத்தில் 11.2076°N 79.4514°E என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது.
வேறு பெயர்கள்
கங்கை கொண்ட சோழபுரத்திற்கு எண்ணற்ற பெயர்கள் உள்ளன. பண்டையப் புலவர்கள் கங்காபுரி, கங்கைமாநகர் கங்காபுரம் போன்ற பெயர்களில் இவ்வூரை குறித்தனர்.[1]
சோழர்களின் புதிய தலைநகர்
இராஜேந்திர சோழன் மேலை, கீழைச் சாளுக்கிய தேசங்களிலும் ஈழம் பாண்டிய சேர தேசங்களையும் வெற்றி கண்ட பிறகு பொ.ஊ. 1019இல் கங்கை வரை படையெடுத்து சென்று வெற்றியும் கண்டார். அதனால் கங்கை கொண்ட சோழன் என்ற பட்டமும் பெற்றார். அதன் நினைவாக 1023இல் கங்கை கொண்ட சோழபுரம் எனும் புதிய தலைநகரை உருவாக்கினார். இங்கு சிவனுக்கு கங்கைகொண்ட சோழீசுவரர் கோயில் எனும் மாபெரும் கோவிலை அமைத்தார்
கங்கை வரை பெற்ற வெற்றியின் நினைவாக கங்கை கொண்ட சோழப் பேரேரி அமைக்கப்பட்டது. இதற்கு சோழகங்கம் என்றும் பெயர் உண்டு.[4]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads