அத்திவெட்டி பெரியதம்பி மழவராயர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பெரியதம்பி மழவராயர் என்பவர் தமிழ்நாட்டின், தஞ்சாவூர், அத்திவெட்டி கிராமத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி ஆவார்.[1]

இந்திய சுதந்திர போராட்டங்களில், தன்னுடைய போராட்டங்களில் தன் கை விரலை வெட்டிக்கொண்டவர், 'அத்திவெட்டி காந்தி என்று மக்களால் அன்போடு அழைக்கப்பெற்றவர்.

1942-ம் ஆண்டு ஆகஸ்ட் போராட்டத்தின் போது 144 தடை உத்தரவை மீறி, நூற்றுகணக்கானவர்களுடன் பட்டுக்கோட்டை நகரத்திற்குள் ஊர்வலமாக சென்றதற்காக காவல்துறை கைது செய்து 144 தடையை மீறியதற்காக வழக்கு பதிவு செய்து சிறையில் அடைந்தனர்.

பெரியதம்பிக்கு மழவராயர் எட்டு மாதம் கடுங்காவல் தண்டனை வழங்கி அலிபுரம் (ஆந்திரா மாநிலம்) சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அதே சிறையில், மகாத்மா காந்தி 21 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த போது பெரியதம்பியும் 21 நாட்களைக் கடந்து சிறையில் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

தண்டனை காலம் முடிந்து வெளிவந்தது மீண்டும் 1943 ஆம் ஆண்டு ஒத்துழையாமை இயக்கத்தை நடத்தியதால் கைது செய்யப்பட்டு 43 நாட்கள் சிறையில் வைத்திருந்தபோது அந்த 43 நாட்களும் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

அதன் பிறகு நீதிமன்றத்தில் ஒரு ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டு அலிபுரம் சிறையில் அடைத்துள்ளனர். அலிபுரம் சிறைக்குள் கைதிகளை நடத்தும் கொடுமையை கண்டித்து போராட ஏற்பாடு செய்தபோது இதை அறிந்த சிறைக்காவலர்கள் தனிச்சிறையில் அடைத்து உணவு தண்ணீர் சரியாக கொடுக்காமல் கொடுமைபடுத்தியதை தாங்கிக்கொண்டு சிறை வாழ்க்கை முடிந்து வெளிவந்துள்ளார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads