அத்தையா மாமியா
சித்ராலயா கோபு இயக்கத்தில் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அத்தையா மாமியா (Athaiya Mamiya) 1974 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 16 ஆம் தேதியன்று வெளிவந்த நகைச்சுவை தமிழ்த் திரைப்படமாகும்.[1][2][3][4][5] கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், உஷா நந்தினி, நாகேஷ், தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், மனோரமா, சச்சு, எம்.பானுமதி, சுகுமாரி, காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
Remove ads
கதை
அமெரிக்காவிலிருந்து வரும் ஒரு இளைஞன் ஊருக்கு வருகிறான். அவனுக்குப் பெண் தர அவனது அத்தை தன் பெண்ணோடு வந்து சேர்கிறார். அதேசமயம் அவனது மாமியின் குடும்பமும் தங்கள் பெண்ணோடு வந்து சேர்கின்றனர். இந்த அமெரிக்க மாப்பிள்ளை, இந்த இரு குடும்பங்களிடையே சிக்கித் தவிக்கிறான். இந்நிலையில் இந்த மாப்பிள்ளை தன் காதலியை மணமுடிக்க, அதனால் வரும் பிரச்சினைகளே கதையாகும்.
நடிப்பு
- சங்கராக ஜெய்சங்கர்
- உசாவாக உஷா நந்தினி as Sumathi
- மஞ்சுவாக மனோரமா
- பஞ்சாபகேசனாக வெண்ணிற ஆடை மூர்த்தி
- பாபுவாக நாகேஷ்
- மாலதியாக சச்சு
- சாரதியாக ஸ்ரீகாந்த்
- காட்டான்குளத்தானின் மனைவியாக காந்திமதி
- காட்டான்குளத்தானாக தேங்காய் சீனிவாசன்
- சச்சிதானந்தமாக வி. எஸ். ராகவன்
- இலட்சுமியாக சுகுமாரி as Lakshmi
- சந்திராவாக எம். பானுமதி
தயாரிப்பு
சென்னைத் தமிழ் பேசும் பெணான அமுதா கணேசன் கோபுவை அணுகி தான் எழுதிய கதையின் அடிப்படையில் ஒரு திரைப்படத்தை உருவாக்கித்தருமாறு கேட்டார். அவர் சூதாட்டத்தில் சம்பாதித்த பணத்தில் படத்தை தயாரித்தார்.
பாடல்கள்
இப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்தார். பாடல் வரிகளை வாலி எழுதினார்.
வரவேற்பு
சிரிக்கவும், போழுதுபோக்கவும் விரும்புபவர்களுக்கு ஏற்ற படம் என்று கல்கியின் எஸ். வி. எஸ். குறிப்பிட்டார்.[6] அத்தையா மாமியா 10 வாரங்கள் திரையரங்குகளில் ஓடியது.[7]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads