எம். பானுமதி (நடிகை)

தென்னிந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia

எம். பானுமதி (நடிகை)
Remove ads

எம். பானுமதி (1946 - 4 பிப்ரவரி 2013) இந்தியாவின் தமிழகத்தை சேர்ந்த நாடக மற்றும் திரைப்பட நடிகையாவார், எதிர்மறை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பெயர் பெற்ற இவர், தமிழ் திரையுலகில் 1970 முதல் 85 வரையிலான காலகட்டத்தில் மிகுந்த ஆதிக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ், மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளிவந்த நூற்றிற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[1][2]

விரைவான உண்மைகள் எம். பானுமதி, பிறப்பு ...
Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

சென்னை, தேனாம்பேட்டை, போயஸ் சாலையில் பானுமதி தனது ஒரே மகள் வெங்கடலட்சுமியுடன் வசித்து வந்துள்ளார்.[3] மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் சிகிச்சையில் இருந்த இவர் மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் 4 பிப்ரவரி 2013 அன்று 67 வயதில் மரணித்தார்.[4]

மற்ற படைப்புகள்

பானுமதி, சிவாஜி கணேசனுடன் இணைந்து சிவாஜி நாடக மன்றம் மற்றும் மேஜர் சுந்தர்ராஜனின் என்எஸ்என் அரங்கு போன்ற நாடக சபாக்களில் பங்கேற்று நாடகங்களிலும் நடித்துள்ளார். நடிகர் சிவகுமார் நினைவு கூர்ந்தபடி, அச்சானி, அப்பாவி, டெல்லி மாப்பிள்ளை, ஜஹாங்கீர், காலம் கண்ட கவிஞன், நீதியின் நிழல், வியட்நாம் வீடு , வேங்கையின் மைந்தன் மற்றும் சொந்தம் போன்ற அனைத்து வெற்றி பெற்ற நாடகங்களிலும், பிரபலமான திரைப்படங்களிலும் கதாநாயகிக்கு இணையாக காணப்பட்டுள்ளார் , மேலும் பானுமதி, சோ, ஜெய்சங்கர், வி. கோபாலகிருட்டிணன், வி. எஸ். ராகவன் மற்றும் ஷேசாத்ரி போன்ற நடிகர்களுடன் இணைந்து நாடக மற்றும் நடன நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.

Remove ads

திரைப்படவியல்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, படப்பெயர் ...

மேடை நாடகங்கள்

  • அச்சானி
  • அப்பாவி [4]
  • டெல்லி மாப்பிள்ளை [4]
  • ஜஹாங்கீர் [1]
  • நீதியின் நிழல் [1]
  • காலம் கண்ட கவிங்கன் [1]
  • சொந்தம் [4]
  • வேங்கையின் மைந்தன் [1]
  • வியட்நாம் வீடு [1]

தொலைக்காட்சி தொடர்கள்

இருபதிற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி தொடர்களில் பானுமதி  நடித்துள்ளார்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, பெயர் ...
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads