அந்தமான் கடல்
கடல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அந்தமான் கடல் (Andaman Sea) அல்லது பர்மா கடல் (Burma Sea) என்பது இந்தியப் பெருங்கடலின் ஒரு பகுதியாகும். இந்நீர்ப்பகுதி வங்காள விரிகுடாவின் தென்கிழக்கே, பர்மாவின் தெற்கே, தாய்லாந்திற்கு மேற்கே, அந்தமான் தீவுகள், மற்றும் இந்தியாவிற்குக் கிழக்கே அமைந்துள்ளது.
பாரம்பரியமாக இக்கடல் மீன் பிடித்தலுக்கும், மற்றும் கரையோர நாடுகளுக்கிடையே பொருட்கள் கொண்டு செல்வதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இங்குள்ள பவளப் பாறைகள் மற்றும் தீவுகள் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் அம்சங்களாகும். 2004 இந்தியப் பெருங்கடல் ஆழிபேரலையை அடுத்து இங்குள்ள மீன்வளம், மற்றும் சுற்றுலாத்துறை பெரும் சேதம் அடைந்தது.
இதன் தென்கிழக்கு எல்லையில், அந்தமான் கடல் மலாய் தீபகற்பத்தையும், சுமாத்திரா தீவையும் பிரிக்கும் மலாக்கா நீரிணையாகக் குறுகுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads