அனத்தியால் மாவட்டம்
மிசோரமில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனத்தியால் மாவட்டம் (Hnahthial district) வடகிழக்கு இந்தியாவில் அமைந்த மிசோரம் மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் 3 சூன் 2019 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1][2]. இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் அனத்தியால் ஆகும்.
Remove ads
மாவட்ட நிர்வாகம்
இம்மாவட்டம் தெற்கு துய்பூய், வடக்கு லாங்லே மற்றும் கிழக்கு லாங்லே என மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. இம்மாவட்டத்தில் உள்ள 27 ஊர்கள் மற்றும் கிராமங்களில் 7187 குடும்பங்கள் உள்ளன. இம்மாவட்ட மக்கள்தொகை 28,468 ஆகவுள்ளது. அதில் ஆண்கள் 14,208 மற்றும் பெண்கள் 14,260 ஆகவுள்ளனர்.[3].
புவியியல்
இம்மாவட்டத்தின் வடக்கு மற்றும் வடகிழக்கில் சேர்ச்சிப் மாவட்டம், கிழக்கில் மியான்மர் நாடு, தெற்கில் சாய்ஹா மாவட்டம், மேற்கிலும், வடமேற்கிலும் லுங்லேய் மாவட்டம் அமைந்துள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads