ஆனந்த் கீத்தே
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆனந்த் கங்காராம் கீதே (Anant Geete) மத்திய கனரக தொழிற்சாலை மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் துறைக்கான அமைச்சர் ஆவார்.[1] இவர் சிவசேனா கட்சியை சேர்ந்தவர். 1951, சூன் 2ல் மும்பையில் பிறந்தார். வயது 62. மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக அரசியல் வாழ்க்கையைத் துவக்கினார். பின் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவராக பணியாற்றினார். மக்களவைத் தேர்தலில் ஆறு முறை வெற்றி பெற்றுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மத்திய அரசில் பல துறைகளில் அமைச்சர் பொறுப்பும் வகித்துள்ளார். சிவ சேனா கட்சியின் மூத்தத் தலைவராக கருதப்படுகிறார். 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் உள்ள ராய்காட் தொகுதியில் போட்டியிட்டு, தேசியவாத காங்கிரசு கட்சியை சேர்ந்த சுனில் தத்தாத்ரேயாவை 2,110 ஓட்டு வித்தியாசத்தில் வென்றார்.[2] இவர் 1951-ஆம் ஆண்டின் ஜூன் இரண்டாம் நாளில் பிறந்தார். இவர் மும்பையில் பிறந்தார்.
Remove ads
பதவிகள்
இவர் கீழ்க்காணும் பதவிகளில் இருந்துள்ளார்.[2]
- 1985-92: மும்பை மாநகராட்சியில் கவுன்சிலர்
- 1996: பதினோராவது மக்களவையில் உறுப்பினர்
- 1998: பன்னிரண்டாவது மக்களவையில் உறுப்பினர்
- 1999: பதின்மூன்றாவது மக்களவையில் உறுப்பினர்
- 1 ஜூலை, 2002 - 25 ஆகஸ்டு 2002: மத்திய அமைச்சர் (நிதித் துறை)
- 26 ஆகஸ்டு 2002 - மே 2004: மத்திய அமைச்சர் (ஆற்றல் துறை)
- 2004: பதினான்காவது மக்களவையில் உறுப்பினர்
- 2009: பதினைந்தாவது மக்களவையில் உறுப்பினர்
- மே, 2014: பதினாறாவது மக்களவையில் உறுப்பினர்
- 27 மே 2014: கேபினட் அமைச்சர் (கனரக தொழிற்சாலைகள் துறை)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads