நரேந்திர மோதி
இந்தியாவின் தலைமை அமைச்சர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நரேந்திர தாமோதர்தாசு மோதீ (Narendra Damodardas Modi, பிறப்பு: 17 செப்டம்பர் 1950) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார், இவர் 2014 மே 26 முதல் இந்தியாவின் பிரதமராக பணியாற்றுகிறார். இவர் 2001 முதல் 2014 வரை குசராத்து மாநில முதல்வராக இருந்தார். வாரணாசி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்து வருகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சி, மற்றும் வலதுசாரி இந்து தேசியவாத அமைப்பான ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் ஆகியவற்றின் உறுப்பினராக உள்ளார். மோதீ இந்திய தேசிய காங்கிரசுக்கு வெளியே நீண்ட காலம் பிரதமராக இருந்து வருகிறார்.
வடகிழக்கு குசராத்தில் உள்ள வாட்நகரில் பிறந்து வளர்ந்த மோதி, அங்கு இடைநிலைக் கல்வியை முடித்தார். எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு அறிமுகமானார். 18 வயதில், யசோதாபென் என்பவரை மணந்தார், ஆனாலும் விரைவில் அவரைக் கைவிட்டார். மோதீ 1971 இல் குசராத்தில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியரானார். அவ்வமைப்பு அவரை 1985-இல் பாசகவில் இணைத்தது. 2001 வரை கட்சியின் படிநிலையில் பல பதவிகளை வகித்து, பொதுச் செயலாளர் பதவிக்கு உயர்ந்தார்.[3][4][5]
Remove ads
அமைச்சகங்கள் மற்றும் துறைகள்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதீயின் நேரடி கண்காணிப்பில் உள்ள அமைச்சகங்கள் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகம் மற்றும் திட்டமிடல் அமைச்சகம் ஆகும். துறைகள் அணு சக்தித் துறை மற்றும் விண்வெளித் துறை ஆகும்.
இளமைப் பருவம்
எட்டு வயதில், மோதீ இராட்டிரிய சுவயம்சேவக் சங்கத்திற்கு (ஆர்எசுஎசு) அறிமுகமானார் மற்றும் அதன் உள்ளூர் சகாக்களில் (பயிற்சி அமர்வுகளில்) கலந்து கொள்ளத் தொடங்கினார். அங்கு, வக்கீல் சாகேப்பு என்று பிரபலமாக அறியப்பட்ட இலட்சுமண்ராவ் இனாம்தாரை மோதீ சந்தித்தார், அவர் அவரை ஆர்எசுஎசில் பால்சுவயம்சேவக் (சூனியர் கேடட்) ஆக சேர்த்து, அவரது அரசியல் வழிகாட்டியாக ஆனார்.[6] மோடி ஆர்எஸ்எஸ் உடன் பயிற்சியில் இருந்தபோது, 1980-இல் பீஜேபி-யின் குசராத்து பிரிவின் சுதாபக உறுப்பினர்களான பாரதீய சனசங்கத் தலைவர்களான வசந்த் கசேந்திரகட்கர் மற்றும் நதலால் சக்தா ஆகியோரையும் சந்தித்தார்.
Remove ads
கல்வி
1978-ஆம் ஆண்டில் மோடி டெல்லி பல்கலைக்கழகத்தில் திறந்த கற்றல் பள்ளியில் (SOL) அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.[7] ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1983-இல், அவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[8]
குடும்பம்
நரேந்திர தாமோதர்தாசு மோதீ ஒரு நடுத்தர குடும்பத்தில் வாட்நகர் என்னும் இடத்தில் பிறந்தார், அவர் தாமோதர்தாசு முல்சந் மோதீ மற்றும் அவரது மனைவி கீரபேன்னுக்கும் பிறந்த ஆறு குழந்தைகளில் இவர் மூன்றாவதாக பிறந்தார். தனது மனைவியின் பெயர் ஜசோதாபென் என 2014-ஆம் ஆண்டிற்கான வடோதரா நாடாளுமன்ற மக்களவை தொகுதி தேர்தலுக்கான வேட்புமனுவில் குறித்துள்ளார்.[9]
குசராத்தின் முதல்வர்
அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாசு மோதீ வெற்றி பெற்று அக்டோபர் 7, 2001-இல் குசராத்தின் முதல்வர் ஆனார். இவர் தன் பதவிக்காலத்தை அக்டோபர் 7, 2001-இல் தொடங்கி சூலை, 2007 வரை இருந்தார். பின் திசம்பர் 23, 2007 தேர்தலில் மறுபடியும் வெற்றி பெற்று ஆட்சியை தொடர்ந்தார். இவர் தொடர்ந்து 2063 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்து, குசராத்து வரலாற்றில் சாதனை படைத்துள்ளார்.
சர்ச்சைகள்
ஊடகங்கள் அறிஞர்களும் இவரை இந்து தேசியவாதியாக விவரிக்கின்றனர்.[10] இக்கூற்றை இவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்.[11][12][13] இந்தியாவிற்குள்ளும், பன்னாட்டளவிலும் மிகுந்த சர்ச்சைகளுக்குட்பட்ட மனிதராக மோதீ உள்ளார்.[14][15][16][17]
கோத்ரா தொடருந்து எரிப்புக்க்குப் பின் 2002-ஆம் ஆண்டு குசராத்து வன்முறைக்காக மிகக் கடுமையாக சாட்டப்பட்டது இருப்பினும் நீதிமன்றத் தீர்ப்பு இவருக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.[17][18]
பெண் ஒருவரை சட்டத்திற்குப் புறம்பாக வேவுபார்த்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.[19]
குசராத்தில் மிக விரைவான பொருளாதார வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கியதாக இவரது பொருளாதார கோட்பாடுகள் பரவலான பாராட்டுக்களைப் பெற்றுள்ளன.[20] இருப்பினும், இவரது ஆட்சி குறிப்பிடத்தக்க மனிதவளர்ச்சிக் கூறுகளில் நேர்மறை தாக்கம் எதுவும் ஏற்படுத்தவில்லை என்றும் குறைகாணப்படுகிறது.[21]
Remove ads
2014 நாடாளுமன்றத் தேர்தல்
பரப்புரை
2014-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (தே.ஜ.கூ.) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, நரேந்திர மோதீ நாடு முழுவதும் பரப்புரை மேற்கொண்டார். ஏப்ரல் 2014 முதல் மே 2014 வரை இரண்டு மாதங்களில் நாடெங்கும் சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 430 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
பிரதமர் பதவி வேட்பாளர்
2014-ஆம் ஆண்டு 16-ஆவது மக்களவைத்தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி முதன்மையேற்கும் தேசிய சனநாயகக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். 2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு வாரணாசி மற்றும் வடோதரா ஆகிய இரண்டு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தார்.[22]
- வடோதரா தொகுதியில் 5,70,128 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
- வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாஜகவின் மக்களவைத் தலைவர்
பாஜகவின் மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன், நாடாளுமன்றத்தின் மைய அரங்கில் உரையாற்றினார்.[23]
Remove ads
2019 மக்களவைத் தேர்தல்
2019 ஆம் ஆண்டு 17 ஆவது மக்களவைத்தேர்தலில் வாரணாசியில் 674664 வாக்குகள் பெற்று 479505 வாக்குகள் வேறுபாட்டில் வெற்றியடைந்தார். இரண்டாவதாக வந்த சமாஜ்வாதி கட்சியின் சாலினி யாதவ் 195159 வாக்குளும் மூன்றாவதாக வந்த காங்கிரசின் அசய் ராய் 152548 வாக்குகளும் பெற்றனர்.
2024 மக்களவைத் தேர்தல்
2024 இந்தியப் பொதுத் தேர்தலில் மீண்டும் வாரணாசியில் போட்டியிட்டு 1,52,513 வாக்குகள் வேறுபாட்டில் காங்கிரசின் அசய் ராயை வென்றார்
இந்தியப் பிரதமர்
முதல் முறை
மே 26, 2014 அன்று பிரதமராக நரேந்திர மோதீ பதவியேற்றார். அவருடன் ஏனைய 44 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். புது தில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையின் வெளிமுற்றத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோதீ மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணமும், இரகசியக் காப்புப் பிரமாணமும் செய்துவைத்தார்.[24]
இரண்டாம் முறை
2019 இந்தியப் பொதுத் தேர்தலில், 543 மக்களவைத் தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 303 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், நரேந்திர மோதீ இரண்டாம் முறையாக இந்தியப் பிரதமராக 30 மே 2019 அன்று பதவி ஏற்றார்.[25][26][27][28]
ஆட்சி முறை
- அமைச்சர்கள் அனைவரும் முதல் 100 நாட்களுக்குரிய தமது திட்ட அட்டவணையை தயாரிக்குமாறு கேட்டுக் கொண்டார். அனைத்து அமைச்சர்களையும், அமைச்சகத்தின் செயலர்களையும் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.[29]
- தனது வாழ்க்கைக் கதையை பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்க எடுக்கப்படும் முயற்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.[30]
அரசுப் பணியில் மோதீயின் இருபதாண்டுகள்
7 அக்டோபர் 2001 அன்று பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக குசராத் மாநில் முதலமைச்சராக பொது வாழ்க்கையில் பணி துவங்கிய நரேந்திர மோதீ, 7 அக்டோபர் 2020 முதல் இருபதாம் ஆண்டில் நுழைந்துள்ளார். இருபதாண்டுகளில் நரேந்திர மோதீ, குஜராத் மாநில முதலமைச்சராக 4 முறையும், இந்தியப் பிரதமராக 2 முறையும் பதவி வகித்துள்ளார்.[31][32][33][34][35][36][37]
- 7 அக்டோபர் 2001 அன்று நரேந்திர மோதீ பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக குஜராத் மாநில முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- கோத்ரா தொடருந்து எரிப்பால் ஏற்பட்ட 2002 குஜராத் வன்முறையால் குஜராத்தில் பாரதிய ஜனதா ஆட்சி சூலை, 2002-இல் கலைக்கப்பட்டது. பின்னர் 2002-இல் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோதீ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
- 2007 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோதீ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
- 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா கட்சியின் முதலமைச்சராக நரேந்திர மோதீ மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
- 2014 இந்திய மக்களவைத் தேர்தலில் நரேந்திர மோதீ பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 336 மக்களவை உறுப்பினர்கள் இடங்களைக் கைப்பற்றியதால் நரேந்திர மோதீ முதன்முறையாக இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2019 இந்திய மக்களவைத் தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, மொத்தமுள்ள 543 மக்களவை உறுப்பினர் தொகுதிகளில் 352 தொகுதிகளை கைப்பற்றியது. அதில் பாரதீய ஜனதா கட்சி தனித்து 303 தொகுதிகளை கைப்பற்றியதால், நரேந்திர மோதீ மீண்டும் இந்தியப் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட்டார்.
- 2014- 2020 ஆண்டு காலத்தில் மட்டும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதீ 58 நாடுகளுக்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக ரூபாய் 518 செலவழிக்கப்பட்டுள்ளது.
- 2014-இல் தூய்மை இந்தியா இயக்கம் நாடு முழுவதும் துவக்கப்பட்டது.
- 2016-இல் ரூபாய் 500 மற்றும் 1000 பணத்தாட்களின் மதிப்பு நீக்கப்பட்டது.
- நாடு முழுவதும் 2017-இல் சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2019 முஸ்லிம் பெண்கள் திருமண உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு இந்தியாவில் முத்தலாக் முறை ஒழிக்கப்பட்டது.
- 2019-இல் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, ஜம்மு காஷ்மீருக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370 மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ மூலம் வழங்கப்பட்ட சிறப்புச் சலுகைகள் நீக்கப்பட்டதுடன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி) மற்றும் லடாக் ஒன்றியப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
- இந்தியா முழுவதற்குமான புதிய வேளாண்மைச் சட்டம், 2020 இயற்றப்பட்டது.[38]
Remove ads
வெளிநாட்டு விருதுகள்
வெளிநாடுகளில் பிரதமர் நரேந்திர மோதீ பெற்ற 11 உயரிய சிவிலியன் விருதுகள்:[39]
- ஏப்ரல் 2016 - சவூதி அரேபியா அரசின் மன்னர் அப்துல் அஜீஸ் விருது[40]
- 2016 - ஆப்கானித்தான் அரசின் காஜி அமீர் அமானுல்லா கான் விருது[41]
- 2018- பாலத்தீனம் வழங்கிய கிராண்ட் காலர் ஆப் தி ஸ்டேட் ஆப் பாலஸ்தீனம் விருது[42]
- 2019 - ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆர்டர் ஆப் சையத் விருது [43]
- 2019- உருசியா அரசின் ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ விருது[44]
- 2019 - மாலத்தீவு அரசின் Order of the Distinguished Rule of Nishan Izzuddin Award[45].
- 2019 - பக்ரைன் அரசின் மன்னர் ஹமாத் மறுமலர்ச்சி விருது[46]
- 2020 - ஐக்கிய அமெரிக்காவின் லீஜியன் ஆப் மெரிட் விருது [47]
- 2021 - பூடான் அரசின் ஆர்டர் ஆப் தி டிராகன் கிங் விருது[48]
- மே 2023 - பிஜி அரசின் ஆர்டர் ஆப் பிஜி [49]
- சூன் 2023 - எகிப்து அரசின் ஆர்டர் ஆப் நைல் விருது[50]
- ஆகஸ்டு 2023 - கிரேக்க நாட்டின் கிராண்ட் கிராஸ் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஹானர் விருது வழங்கப்பட்டது.[51]
Remove ads
நூல்கள்
- சக்தி பாவ் (2015)
- சமூக நல்லிணக்கம் (2015)
- ஜோதி பூனா (2015)
- 'சமூக நல்லிணக்கம்' குஜராத்தி மொழியில் 'சமாஜிக் சம்ரஸ்தா' (2010)
பரிசுப் பொருட்கள்
குசராத் முதலமைச்சராக மோதீ தனது பதவிக்காலத்தில் கிடைத்த அனைத்துப் பரிசுப் பொருட்களையும் வருடந்தோறும் ஏலம் விட்டு கன்யா கேலவாணி அபியான் என்ற பெயரினில் பெண் குழந்தைகள் திட்டத்திற்குக் கொடுத்தார். 2003 முதல் 2014 வரை வருடந்தோறும் நடந்த இந்த ஏலம் மூலம் 89.96 கோடி பெறப்பட்டது.[52]. பிரதமராவதற்கு முன்பு 2014 மே மாதத்தில், குசராத் அரசு ஊழியர்களாக வேலை செய்யும் கடைநிலை ஊழியர்களின் பெண் குழந்தைகள் படிப்பிற்கு தனது சொந்த சேமிப்பிலிருந்து 21 இலட்சம் நன்கொடையாக அளித்தார்.[53]
பிரதமர் மோதீ தனது முதல் பதவிக் காலத்தில் தனக்குக் கிடைத்த அனைத்துப் பரிசுப் பொருட்களையும் ஏலம் விடுவதின் மூலம் கிடைக்கும் பணத்தினை இந்தியாவின் ஜீவநதியான கங்கையைப் பாதுகாக்கும் "நமாமி கங்கா" திட்டத்திற்கு கொடுக்க முடிவு செய்தார். இவ்வாறு பரிசுப்பொருட்களை ஏலம் விடும் முதல் இந்தியப் பிரதமர் மோதீ ஆவார்.
சர்ச்சைக்குரிய வகையில் பேசப்பட்ட 10 இலட்சம் மதிப்பிலான அங்கியானது 4.3 கோடி மதிப்பில் ஏலம் எடுக்கப்பட்டு, அந்தத் தொகையானது நமாமி கங்கா திட்டத்திற்கு கொடுக்கப்பட்டது.[54]
- முதல் முறையாக இந்திய கலாச்சார அமைச்சகத்தின் மேற்பார்வையில் 2019, ஜனவரி 28 மற்றும் 29 ஆகிய இரண்டு நாட்களில் ஏறக்குறைய 2,000 பொருட்கள் ஏலம் விடப்பட்டது, அதைத் தொடர்ந்து 2019, ஜனவரி 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இணையம் வழியாக-ஏலம் நடைபெற்றது.[55]
- இரண்டாம் முறையாக 2019 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 7 வரை ஏலம் நடைபெற்றது. 2700-இற்கும் அதிகமான பரிசுப்பொருட்கள் தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் ஏலம் விடப்பட்டன.[56]
- மூன்றாம் முறையாக 1300 பரிசுப்பொருட்களுக்கு 2021 செப்டம்பர் 17-இல் இணையம் வழியாக ஏலம் நடைபெற்றது.[57][58]
- நான்காம் முறையாக 2022 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை இணையம் வழியாக ஏலம் நடைபெற்றது. 1,200 பரிசுப்பொருட்களின் அடிப்படை விலையின் கூட்டுத்தொகை 2 கோடிக்கும் அதிகமாக கணக்கிடப்பட்டது.[59]
மக்கள் தொடர்பு
மோதீ பிரதமரான பிறகு மனதின் குரல் என்ற நிகழ்ச்சி மூலம், 3 அக்டோபர் 2014 முதல் தொடர்ந்து நாட்டு மக்களுடன் அனைத்திந்திய வானொலி மற்றும் தூர்தர்சன் தேசியத் தொலைக்காட்சி மற்றும் தூர்தர்ஷன் செய்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டு மக்களிடையே மாதம் ஒரு முறை உரையாற்றுகிறார்.மனதின் குரல் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் "அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் குறித்து குடிமக்களுடன் ஒரு உரையாடலை ஏற்படுத்துவதாகும்".[60][61]
மோதி பிரதமராக பதவியேற்றதிலிருந்து ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையை இராணுவ வீரர்களுடன் கொண்டாடிவருகின்றார்.[62][63][64]
2018 பிப்ரவரி 16 முதல், தேர்வு எழுதப்போகும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடும் "ப்ரிக்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சி மூலம் உரையாடுகின்றார்.
2023 ஜனவரி 27-இல் ஆறாவது முறையாக, புதுதில்லி தல்கத்தோரா உள்ளரங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்க்ள் மத்தியில் நடைபெறுகிறது. இதற்கான பதிவுசெய்யும் பணி நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெற்றது. 2022-இல் 15.73 இலட்சம் மாணவர்கள் பங்கேற்றிருந்த நிலையில், 2023-இல் 38.8 இலட்சம் பேர் உலகம் முழுவதிலிருந்தும் 155 நாடுகளிலிருந்து இணையவழி நிகழ்ச்சிக்கு பதிவுசெய்துள்ளனர், 16 இலட்சத்துக்கும் மேற்பட்ட மாநில தேர்வுவாரியத்தின் கீழ் பயிலும் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.[65]
சொத்து மதிப்பு
பிரதமர் நரேந்திர மோதீயின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ. 26.13 இலட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 2 கோடியே 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ஆக உயர்ந்துள்ளது.[66][67]
குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
