அனிச்சம் (தாவரம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அனிச்சை அல்லது அனிச்சம் (Anagallis arvensis, Scarlet pimpernel) என்பது குறைவாக வளரும் ஆண்டுத் தாவரம் ஆகும். இதன் தாயகப் பகுதிகளாக ஐரோப்பா, தென்மேற்கு ஆசியா, வடக்கு ஆப்பிரிக்கா ஆகிய இடங்கள் காணப்படுகின்றன.[1]

இதன் பூக்கள் மிகவும் மென்மையான இதழ்களை உடையன. முகர்ந்து பார்த்தவுடனேயே வாடிவிடக்கூடிய இயல்புடையது இந்தப் பூ.[2] இதன் பூக்கள் மென் செம்மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களில் காணப்படும். இது சூரியன் உதித்ததும் அதன் பூக்கள் மலரத் தொடங்கும்.[3]
அனிச்சம் சங்கநூல்கள் குறிப்பிடும் மலர்களில் ஒன்று.
மகளிர் குவித்து விளையாடிய 99 மலர்களில் ஒன்றாகக் குறிஞ்சிப்பாட்டு நூல் குறிப்பிடுகிறது.[4] நீலம், அல்லி, அனிச்சம், முல்லை, நறவு ஆகிய மலர்களைத் தலையில் அணியும் கண்ணியாகவும், கழுத்தில் அணியும் மாலையாகவும் தொடுத்து அணிந்துகொண்டனர் என்று கலித்தொகை குறிப்பிடுகிறது [5]
மூச்சுக்காற்றுப் பட்டாலே குழையும் அளவுக்கு அனிச்சம் மென்மையான மலர் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது.
மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து [6]
இதன் மென்மைத் தன்மை இரண்டு திருக்குறள்களிலும் சுட்டப்படுகிறது.
நன் நீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென் நீரள் யாம் வீழ்பவள் [7]
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப்பழம் [8]
அனிச்சம் பூ மிகவும் இலேசானது என்று ஒரு திருக்குறள் குறிப்பிடுகிறது.
அனிச்சப்பூ கால் களையாப் பெய்தாள் நுசும்பிற்கு
நல்ல படா பறை [9]
Remove ads
காப்பியங்களில் அனிச்சம்
- ஆண்கள் தலையில் சூடிக்கொள்வர்.[10]
- மாலையாகத் தொடுத்தும் அணிவர்.[11]
- பட்டாடை மேல் அனிச்ச மாலை அணிவர்.[12]
- கருவைத் தாங்கும் பெண்ணுக்கு அனிச்ச மலரும் சுமையாயிற்று.[13]
- அல்லிப் பூவோடு சேர்த்து அனிச்ச மலரை அணிவதும் உண்டு.[14]
- ஐ என்னும் வியப்புக்கு உரிய மலர்.[15]
- குழையும் மலர்.[16]
- பஞ்சி படர்ந்த மலர்.[17]
- அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மிகவும் மென்மையானவை.[18]
- வியப்புக்கு உரிய நொய்ய மலர்.[19]
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads