அப்காசியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அப்காசியா (Abkhazia) என்பது கோகேசியாவில் உள்ள ஒரு பகுதியாகும். இது பன்நாட்டு ஏற்பு கிட்டாத, ஏற்கப்படாத தன்னுரிமை[1] குடியரசாகும். இது ஜோர்ஜியாவின் ஒரு அதிகாரபூர்வ பகுதியாக தன்னாட்சியுள்ள குடியரசு ஆகும். ரஷ்யா ஆகத்து 26, 2008 இல் இக்குடியரசையும், தெற்கு ஒசேத்தியாவையும் தனிநாடுகளாக அங்கீகரித்து அறிவித்தது. ஐநாவின் வேறு எந்த உறுப்பு நடுகளும் இதுவரையில் இதனை அங்கீகரிக்கவில்லை.

அப்காசியா கருங் கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ளது. இதன் வடக்கு எல்லையில் ரஷ்யா உள்ளது. இதன் தலைநகர் சுகுமி.
அப்காசிய மக்களின் பிரிவினைவாதிகள் 1992 ஆம் ஆண்டில் ஜோர்ஜியாவிடம் இருந்து தம்மை தனிநாடாக அறிவித்தனர். இதனை அடுத்து 1992 முதல் 1993 வரை இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் ஜோர்ஜியா தோல்வியடைந்தது. அப்காசியாவில் இருந்து அனைத்து ஜோர்ஜிய மக்களும் வெளியேற்றப்பட்டனர். 1994 இல் ஐநாவின் ஆதரவில் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது. ஐநாவின் கண்காணிப்பில், ரஷ்யா தலைமையிலான அமைதிப் படையினர் அங்கு நிலை கொண்டனர். எனினும் இதன் உரிமை தொடர்பாக ரஷ்யாவுக்கும் ஜோர்ஜியாவுக்கும் இடையில் முறுகல் நிலை தொடர்ந்தது. சூலை 2006 இல் ஜோர்ஜியா அப்காசியாவின் "கடோரி கோர்ஜ்" பகுதியில் வெற்றிகரமான இராணுவத் தாக்குதலை நடத்தியிருந்தது. ஆகத்து 2008 இல் அப்காசியப் படைகள் கடோரி ஏரியின் பெரும் பகுதிகளை மீளக் கைப்பற்றியது[2].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads