தெற்கு ஒசேத்தியா

From Wikipedia, the free encyclopedia

தெற்கு ஒசேத்தியா
Remove ads

தெற்கு ஒசேத்தியா (South Ossetia, ஒசேத்தியம்: Хуссар Ирыстон, குசார் இரிஸ்தோன், ஜோர்ஜிய மொழி: სამხრეთ ოსეთი, சம்க்ரேத் ஒசேட்டி; ரஷ்ய மொழி: Южная Осетия, யூசுனாயா ஒசேத்தியா) ஜோர்ஜியாவில் ஒரு நடப்பின்படி மெய்யான தன்னாட்சிப் பகுதியாகும். 1990களின் ஆரம்பத்தில் ஜோர்ஜியா-ஒசேத்தியப் பிரச்சினை ஆரம்பித்தபோது தெற்கு ஒசேத்தியா விடுதலையை அறிவித்தது. ஆனாலும் உலகில் எந்த ஒரு நாடும் தெற்கு ஒசேத்தியாவின் விடுதலையை ஒப்புக்கொள்ளவில்லை. தொடர்ந்து ஜோர்ஜியாவின் கீழேயே இருந்து வருகிறது. ஜோர்ஜியா இப்பகுதியின் கிழக்கு, மற்றும் தெற்கு மாகாணங்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து ஏப்ரல் 2007 இல் அங்கு "தெற்கு ஒசேத்தியாவின் தற்காலிக நிருவாகம்" ஒன்றை[1][2][3][4] பிரிந்துபோன முன்னாள் ஒசேத்திய உறுப்பினர்களின் தலைமையில் அமைத்தது[5].

விரைவான உண்மைகள் தெற்கு ஒசேத்தியாХуссар Ирыстонსამხრეთ ოსეთი Южная ОсетияSouth Ossetia, பரப்பு ...
Remove ads

ஜோர்ஜிய-ஒசேத்திய முறுகல்

ஆகஸ்ட் 2008இல் ஜோர்ஜியா இராணுவம் இப்பகுதியை படையெடுத்து இப்பகுதியின் தலைநகரம் திஸ்கின்வாலியை கைப்பற்ற முனைந்தது. இதற்குப் பதிலாக ரஷ்ய இராணுவம் தெற்கு ஒசேத்தியாவில் வந்து ஜோர்ஜிய இராணுவத்துக்கு எதிராக தாக்குதல் செய்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads